Bank of Baroda வங்கியில் 206 பணியிடங்களுக்கு ₹48,480 முதல் ₹1,20,940 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு
பேங்க் ஆஃப் பரோடா பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 206 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்
மொத்தம் 206 பணியிடங்கள் கீழ்க்கண்ட முக்கிய துறைகளில் நிரப்பப்பட உள்ளன.
டிஜிட்டல் பேங்கிங் -19
ஃபைசிலிட்டி மேனேஜ்மென்ட்-88
இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி-16
செக்யூரிட்டி-54
என்டர்பிரைஸ் டேட்டா மேனேஜ்மென்ட்-14
கார்ப்பரேட் அக்கவுண்ட்ஸ் & டேக்ஷேஷன்-15
கல்வித்தகுதி & அனுபவம்
1.Manager / Senior Manager – Digital Product
தகுதி:
B.E / B.Tech (IT / CSE / ECE) அல்லது MCA.
அனுபவம்:
3 முதல் 6 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
2.Technical Officer / Manager (Civil & Electrical)
தகுதி
Civil அல்லது Electrical இன்ஜினியரிங்
(BE / B.Tech)
அனுபவம்:
2 முதல் 7 ஆண்டுகள் வரை
3.Manager / Senior Manager – Information Security
தகுதி
B.E / B.Tech / MCA / M.Sc / M.Tech (Cyber Security / IT / CSE) உடன் CEH / CISA / CISSP சான்றிதழ்.
4.Manager – Security:
தகுதி:
ஏதேனும் ஒரு டிகிரி.
(ராணுவம், கடற்படை, விமானப்படை அல்லது காவல்துறை/துணை ராணுவத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும்).
5.Data Scientist / Data Profiling / DQ Analyst:
தகுதி:
B.E / B.Tech / M.Sc / MCA (Data Science / Statistics / Maths / IT).
சம்பளம்
Rs.48,480 – 1,20,940/-
வயது வரம்பு: 23 முதல் 40 வயது வரை
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
Other – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
Online Test
Psychometric Test
Group Discussion and/or Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
06.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி:
26.08.2026
விண்ணப்பிக்கும் முறை:
Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும்.
அங்கு BOB/HRM/REC/ADVT/2026/15 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
“Apply Online” என்பதைக் கிளிக் செய்து புதிய பதிவு (New Registration) செய்யவும்.
உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்யவும்.
பதிவு செய்யப்பட்ட Registration Number மற்றும் Password மூலம் Login செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம் (தேவைப்படும் பதவிகளுக்கு) உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.
Passport Size Photo, Signature மற்றும் தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுப்படி Upload செய்யவும்.
உங்கள் பிரிவிற்கு (General/ OBC/ EWS/ SC/ ST/ PwBD) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து “Final Submit” செய்யவும்.
சமர்ப்பித்த விண்ணப்பத்தின் Printout / PDF-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு படிக்க
https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-Regular-06-08-2026-05-34.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://bankofbaroda.bank.in/career/current-opportunities

No comments:
Post a Comment