எஸ்பிஐ வங்கியில் 9,121 கிளார்க் பணியிடங்களுக்கு ₹64,480 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 13, 2026

எஸ்பிஐ வங்கியில் 9,121 கிளார்க் பணியிடங்களுக்கு ₹64,480 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 எஸ்பிஐ வங்கியில் 9,121 கிளார்க் பணியிடங்களுக்கு ₹64,480 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 9,121 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இதில் நாடு முழுவதும் காலியாக உள்ள 9,121 ஜூனியர் அசோசியேட் எனப்படும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,516 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பதவி: Junior Associates (Customer Support & Sales)


சம்பளம்: Rs.24,050 – 64,480/-


காலியிடங்கள்: 9124


இரண்டு கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, அசாமி, உருது, குஜராத் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு நடைபெறும்.


கல்வி தகுதி:


Any Degree from a recognized University.


Final-year students

can apply (must pass by 31.12.2026).


Integrated Dual Degree (IDD)ப candidates must have passed by 31.12.2026.


Ex-servicemen with the required Army/Navy/Air Force education certificate are also eligible.


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பட்டப்படிப்பு படித்திருப்பதோடு விண்ணப்பிக்கும் மண்டலத்தின் உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை


வயது தளர்வு:


SC/ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்




விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:


தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதமான


 sbi.bank.in/web/careers/current-openings


 என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்ப கட்டணம்: 


SC/ ST/ PwBD/ XS/ DXS – கட்டணம் இல்லை


Others – Rs.750/-


தேர்வு செய்யும் முறை:


Preliminary Exam (Objective Tests)


Main Exam (Objective Tests)


Local Language Proficiency Test (where applicable)


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 11.08.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 31.08.2026


கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, விருப்பமுள்ள தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


SBI Careers இணையதளத்திற்கு செல்லுங்கள்.


“Current Openings” என்பதைத் தேர்வு செய்யவும்.


“RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.


“Apply Online” என்பதைத் தேர்வு செய்யவும்.


புதிய பயனராக இருந்தால் Registration செய்து Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும்.


 Registration Number மற்றும் Password கொண்டு Login செய்யவும்.


தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி மற்றும் தேர்வு மைய விருப்பங்களை நிரப்பவும்.


தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.


விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.


விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://sbi.bank.in/webfiles/uploads/files_2627/08/JA_2026_Detailed_Advt_Eng.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/sbijajul26/

No comments:

Post a Comment