இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 பணியிடங்களுக்கு ரூ 85,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 பணியிடங்களுக்கு ரூ 85,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.85.000 வரை ஊதியத்தில் 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்
லோக்கல் பேங்க் ஆபிசர் - 250
தமிழ்நாடு - 100
கர்நாடகா - 50
மகாராஷ்டிரா - 50
குஜராத் - 50
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
01.08.2006 க்கு பிறகோ, 02.08.1996 க்கு முன்பாகவோ பிறந்தவராக இருத்தல் கூடாது.
அரசுவிதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
எஸ்சி/எஸ்டி பிரிவினராக இருந்தால் 35 வயது வரையும், ஒபிசி பிரிவினராக இருந்தால் 33 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளாக 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
தேர்வு செய்யப்படும் லோக்கல் பேங்க் ஆபிசர்களுக்கு மாதம் ரூ.48,480 - 85,920 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு
உள்ளூர் மொழித்தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை, திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி / நாகர்கோவில், தஞ்சாவூர், கடலூர் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்வு எழுத விரும்பும் மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
24.08.2026
தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.iob.bank.in/en/careers

No comments:
Post a Comment