சிறுநீரகத்தை சீராக்கும் சிறுகீரை யின் மருத்துவ பயன்கள்..!
சில்லி கீரை என்று அழைக்கப்படும் சிறுகீரை சற்று சிறியதாக இருந்தாலும் மிகச்சிறந்த பலனை கொண்டதாகும்.
மனதை ஒருமுகப்படுத்தி, புத்திக்கூர்மையையும்,உடல் பலத்தையும் தரும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியம் இன்றியமையாது. இது இரத்தத்தில் உள்ள தேவையில்லாத உப்புகளை வெளியேற்றி சிறுநீரகம் சீராக செயல்பட உதவுகிறது.
நீரிழிவு, இரத்த அழுத்தம்,உடல் பருமனைக் குறைக்கிறது. நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறு கீரையும் ஒன்று. ஆகவே மலச்சிக்கல் உள்ளவர்கள் இக்கீரையை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் மலச்சிக்கல் நீங்கி செரிமான மண்டலம் உறுதியாகும்.
சிறுகீரையை உணவில் வாரம் ஒரு முறை சேர்த்து வர உடல் வெப்பம் பித்த நோய்கள் நீங்கும்.
கோடை காலத்தில் வருகின்ற சிறுநீர் கடுப்பு, அடிவயிற்றில் வரும் வலி நீங்கி நன்றாகச் சிறுநீர் பிரியும்.
சிறுகீரையுடன் மஞ்சள், கருஞ்சீரகம் சேர்த்து நீர் விட்டரைத்து சமைத்து உண்டால் ஊரல்,சொறி, படை போன்ற தோல் நோய்கள் நீங்கும். மேலுக்கு பூசி வரவும் அவை குணமாகும்.

No comments:
Post a Comment