சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ரூ70,000 முதல் ரூ 2,20,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 17, 2026

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ரூ70,000 முதல் ரூ 2,20,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில்  ரூ70,000 முதல் ரூ 2,20,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.07.2026 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


General Manager (Operations)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: B.E / B. Tech படித்திருக்க வேண்டும். மற்றும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி: 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 1,20,000 – 2,80,000


Deputy General Manager (Rolling Stock)


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: B.E / B. Tech (Electrical/ ECE) படித்திருக்க வேண்டும். மேலும் 13 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 80,000 – 2,20,000


Deputy General Manager (Automatic Fare Collection)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: BE / B.Tech in (ECE/ EEE/ IT/ CSE) படித்திருக்க வேண்டும். மேலும் 13 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 80,000 – 2,20,000


Manager (Automatic Fare Collection)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: BE/ B.Tech in (ECE/ EEE/ IT/ CSE) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.


வயதுத் தகுதி: 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 70,000 – 2,00,000


வயது வரம்பு தளர்வு:


 விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்


 https://careers.chennaimetrorail.org/ 


என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2026


விண்ணப்பக்க கட்டணம்: 


ரூ 300. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 50


அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காண 


https://careers.chennaimetrorail.org/Reference/CMRL-HR-CON-DEP-04-2026.pdf

No comments:

Post a Comment