ஐடிபிஐ வங்கியில் 31 பணியிடங்களுக்குரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 16, 2026

ஐடிபிஐ வங்கியில் 31 பணியிடங்களுக்குரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

 ஐடிபிஐ வங்கியில் 31 பணியிடங்களுக்குரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!


ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 31 எஸ்.ஓ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.


தற்போது இந்த வங்கியில் 31 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


காலிப்பணியிட விவரம்:


மொத்தம் 31 எஸ் ஓ எனப்படும் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுக்க உள்ள ஐடிபிஐ வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படலாம். இது ஒரு நிரந்தரப் பணியிடமாகும்.


* தகவல் அமைப்பு தணிக்கை கிரேடு C - 4 பணியிடங்கள்


* தகவல் அமைப்பு தணிக்கை கிரேடு B - 6 பணியிடங்கள்


* உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறை - கட்டிட பராமரிப்பு (Premises) கிரேடு D - 5 பணியிடங்கள்


* உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறை - கட்டிட பராமரிப்பு (Premises) கிரேடு B - 3 பணியிடங்கள்


* சட்ட அதிகாரி (Legal) கிரேடு D - 3 பணியிடங்கள்


* சட்ட அதிகாரி (Legal) கிரேடு B - 6 பணியிடங்கள்


* பாதுகாப்பு அதிகாரி கிரேடு B - 4 பணியிடங்கள்


 என மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


கல்வித் தகுதி:


கல்வித் தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும்.


 B.E/B.Tech, LLB, B.Sc, BCA, M.Sc, MCA, M.E/M.Tech போன்ற தகுதிகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும்.


 கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.


வயது வரம்பு:


வயது வரம்பை பொறுத்தவரை, 01.07.2026 அன்று தேதிப்படி கணக்கில் கொள்ளப்படும். குறைந்தப்படசம் 25 வயது நிரம்பியவர்களும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.


சம்பளம் எவ்வளவு?


Grade D - ரூ. 2,04,000/-


Grade C (Audit - IS) - ரூ. 1,69,000/-


Grade B (Audit / IMD / Legal / Security) - ரூ. 1,29,000/-


தேர்வு முறை


தேர்வு முறையை பொறுத்தவரை, குழு விவாதம், நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்


தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லை மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,050 ஆகும். SC/ST/Ex-Servicemen/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250 ஆகும்.


விண்ணப்பிப்பது எப்படி?


ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbi.bank.in/ பக்கத்தில் உள்ள 'Careers' பகுதிக்குச் சென்று, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி தங்கள் கட்டணத்தை செலுத்திச் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:


 26.07.2026


அதிகாரப்பூர்வ  அறிவிப்பினை படிக்க


 https://www.idbi.bank.in/pdf/careers/Detailed-Advt-of-SCO-2026-27.pdf

No comments:

Post a Comment