இந்தியன் ரயில்வேயில் 119 பணியிடங்களுக்கு ரூ.35,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, July 20, 2026

இந்தியன் ரயில்வேயில் 119 பணியிடங்களுக்கு ரூ.35,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 இந்தியன் ரயில்வேயில் 119 பணியிடங்களுக்கு ரூ.35,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு (Railway job) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 119 செக்‌ஷன் கண்ட்ரோலர் பணியிடங்களானது நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும்.


பணியிடங்கள் விவரம்:


செக்‌ஷன் கண்ட்ரோலர்: 119


 பணியிடங்கள்

மண்டல வாரியாக


அகமதாபாத் - 11


அஜ்மீர் - 01


பிரயாக்ராஜ் - 04


பெங்களூர் - 08


போபால் - 06


புவனேஸ்வர் - 06


பிலாஸ்பூர் - 04


சண்டிகர் - 06


சென்னை - 09


கோரக்பூர் - 05


கவுகாத்தி - 01


கொல்கத்தா - 08


மால்டா - 07


மும்பை - 06


முசாபர்பூர் - 03


பாட்னா - 06


ராஞ்சி - 14


செகந்திராபாத் - 05


சிலிகுரி - 05


திருவனந்தபுரம் - 04


கல்வித் தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:


01.07.2026 தேதிப்படி 20 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளு சலுகை உண்டு. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 38 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.


சம்பளம் எவ்வளவு?


செக்‌ஷன் கண்ட்ரோலர் லெவல் 6 பணிக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு முறை:


கணிணி வழியிலான தேர்வு (சிபிடி) அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்ப கட்டணம்


எஸ்சி/எஸ்டி, பெண்கள், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் ரிட்டர்ன் செய்யப்படும். பிற, பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் ரிட்டர்ன் செய்யப்படும்.


தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


விண்ணப்பிக்க வரும் 14.08.2026 கடைசி நாளாகும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_03_2026.pdf


Online இல் விண்ணப்பிக்க 


https://www.rrbapply.gov.in/#/auth/landing

No comments:

Post a Comment