SBI வங்கியில் 7,150 அப்ரண்டீஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு :விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
எஸ்.பி.ஐ வங்கி நாடு முழுவதும் உள்ள சுமார் 7,150 அப்ரண்டீஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் முடியவுள்ளதால் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் நாடு முழுவதும் சுமார் 7,150 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகிய நிலையில் கூடிய விரைவில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிய இருக்கிறது. அதனால் தகுதியுள்ள அனைவரும் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரங்கள்:
சென்னை - 33
திருவள்ளூர் - 18
செங்கல்பட்டு - 15
காஞ்சிபுரம் - 12
கள்ளக்குறிச்சி - 05
விழுப்புரம் -15
கடலூர் - 10
மயிலாடுதுறை - 05
நாமக்கல் - 08
திருவாரூர் - 08
தஞ்சாவூர் - 12
அரியலூர் - 06
பெரம்பலூர் - 05
திருச்சிராப்பள்ளி - 18
ராணிப்பேட்டை - 05
திருவண்ணாமலை - 10
வேலூர் - 06
திருப்பத்தூர் - 08
கிருஷ்ணகிரி - 10
தருமபுரி - 05
சேலம் - 15
கரூர் - 05
ஈரோடு - 10
திருப்பூர் - 10
திண்டுக்கல் - 10
கோயம்புத்தூர் - 15
நீலகிரி - 10
தேனி - 10
சிவகங்கை - 05
விருதுநகர் - 10
மதுரை - 18
நாகப்பட்டினம் - 10
புதுக்கோட்டை - 05
இராமநாதபுரம் - 05
திருநெல்வேலி - 12
தென்காசி - 05
தூத்துக்குடி - 15
கன்னியாகுமரி - 12
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்களை பட்டம் முடித்திருக்க வேண்டும். (Any Degree)
பயிற்சிக் காலம்:
1 வருடம்
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.
சம்பளம்:
மாதம் ரூ.15,000 (Strippend)
விண்ணப்பக் கட்டணம்:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து, அதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300-ஐ செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி/எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு முறை:
கணினி வழியில் நடைபெறும் இந்த தேர்வு மொத்தம் 100 கேள்விகளுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். கேள்விகள் மொத்தம் 13 மொழிகளில் கேட்கப்படும் ஆங்கிலத் தேர்வைத் தவிர்த்து மற்ற கேள்விகளுக்கு அவரவர் உள்ளூர் மொழிகளிலேயே தேர்வு எழுதலாம். விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பத்தாரர்கள் அவர்களது உள்ளூர் மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பத்தாரகள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்பிப்பதற்கான கடைசி தேதி
15.06.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://sbi.bank.in/documents/77530/57941334/19052026_ENGAGEMENT+OF+APPRENTICE+2026+ADVERTISEMENT+CRPD_APPR_2026-27_07.pdf/fa9015ff-2268-a829-f9e8-8c1b5d55e126?t=1779173730791
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://ibpsreg.ibps.in/sbiaapr26/
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://sbi.bank.in/web/careers/current-openings

No comments:
Post a Comment