அழகாகத் தெரிய என்ன செய்ய வேண்டும்?மேக்-அப்பில் செய்யும் தவறுகள் என்னென்ன?
நம்மை அழகாக, இளமையுடன் காட்டுவதற்குதான் போடப்படும் மேக் - அப், சிலருக்கு கூடுதலாக நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அன்றாட வாழ்க்கையிலும் ஒருவித நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம்.
ஆனால், சிலர் மேக்-அப் செய்யாமல் அழகாக இருப்பார்கள், மேக்-அப் போடும்போது அவர்களை வயதானவராக, அவருடைய முகத்திற்கு ஒவ்வாததாகக் காட்டும். மேக்-அப் கலைந்து சருமத்தைப் பொலிவிழக்கச் செய்யும். இதற்கு காரணம் அவர்களது சருமத்திற்கு ஏற்ற மேக்-அப் போடாததுதான்.
எனவே, மேக்-அப் போடும்போது அவரவர் முகத்திற்கு ஏற்ப, நிறத்திற்கு, சருமத்திற்கு ஏற்ப மேக்-அப் போட வேண்டும். அவர்களுக்கு ஏற்ற அழகு சாதனப் பொருள்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மேக்-அப்பில் செய்யக்கூடாதவை!
ஃபவுண்டேஷன் (Foundation
உங்கள் சருமம் பொலிவிழந்து காணப்படும்போது, அதனைச் சரிசெய்ய முழு கவரேஜ் தரும் ஃபவுண்டேஷன் பயன்படுத்துவீர்கள். ஆனால் அது தவறு.
அடர்த்தியான மேட் ஃபார்முலா பவுண்டேஷன், சருமத்தில் மெல்லிய கோடுகளாகப் படிந்து, உங்கள் முகத் தோற்றத்தை கனமாகவும் பொலிவிழந்தும் காட்டும். அதனால் அடர்த்தியாக இல்லாமல் மெலிதான பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்தை பொலிவானதாகக் காட்டும்.
பவுடர் (Powder)
பவுடர் முகத்தில் ஒருவித பளபளப்பை ஏற்படுத்தும். ஆனால் அதிகமாகப் பயன்படுத்தினால் அதுவே முகத்தின் பொலிவைக் குறைத்துவிடும். குறிப்பாக கண்கள் மற்றும் வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக ஒட்டிக்கொள்ளும். அதனால் பவுடரை அளவாகப் பயன்படுத்துங்கள். மூக்கின் நுனி, தாடை ஆகிய பளபளப்பு தெரியும் பகுதிகளில் பவுடர் போடுங்கள். நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்றால் ஒரு செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.
ஐ - ப்ரோ பென்சில் (Eye Brow pencil)
புருவங்கள்தான் முகத்தின் தோற்றத்தையே பிரதிபலிக்கின்றன. அதனால் புருவங்களை உங்கள் முகத்திற்கு ஏற்றவாறு அளவாக, அழகாகக் காட்ட வேண்டும். மிகவும் அடர்த்தி குறைந்த புருவங்கள் வயதானவராகக் காட்டக் கூடும். அதேபோல அளவுக்கு அதிகமாக அடர்த்தியுடன் காட்டப்படும் புருவங்கள் செயற்கையான தோற்றத்தைத் தரும். உங்கள் புருவத்தின் இடைவெளியை மட்டும் சரிசெய்யுங்கள். மிகவும் மெல்லிய புருவம் கொண்டவர்கள் சற்று அதிகமாக போட்டுக்கொள்ளலாம்.
லிப்ஸ்டிக் (Lipstick)
லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போதும் அடர்த்தியானதாக, வறண்டு காணப்படும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அது உதடுகளில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.
சிலருக்கு டார்க் நிற லிப்ஸ்டிக் பொருத்தமாக இருக்கும். பெரும்பாலானோருக்கு அடர்த்தி குறைந்த பிங்க், பீச் நிறத்தில் க்ரீமியான லிப்ஸ்டிக் போட்டால் அழகாக இருக்கும். அது முகத்திற்கு புத்துணர்ச்சியையும் அழகையும் தரும்.
ஃபிளஷ் (Flush)
பலரும் மேக்-அப்பில் பிளஷ் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுகிறார்கள், ஆனால் உண்மையில் சரும அழகுக்கு அது தேவையானது. கருமையான இடத்தில் மட்டும் ஃபிளஷ் செய்தால் முகம் தட்டையாக தோற்றமளிக்கலாம்.
நீங்கள் சிரிக்கும்போது உங்கள் கன்னத்தின் நுனிப் பகுதியில் ஃபிளஷை மென்மையாகத் தடவி மேலும் கீழும் பரப்பி விடுங்கள். இயற்கையான தோற்றத்தைக் கொடுப்பதுடன் சருமத்தில் பொலிவைத் தரும்.
ஐ-லைனர்
அதேபோல ஐ-லைனர் சிலர் அடர்த்தியாக போடுவது கண்களின் கீழ் கருவளையம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அதனால் கண்கள் சிறியதாகத் தோன்றும். அதனால் ஐ-லைனர் மெல்லிய ஒரு கோடு அளவுக்கு போட்டால் போதுமானது.
மேக் - அப்
சிலர் மேக் - அப் என்பதே போடுவதில்லை. சருமத்திற்கு நல்லதல்ல என்று கூறி தவிர்க்கிறார்கள். ஆனால் சருமத்தை வறண்டுபோகச் செய்யாமல், நீரேற்றத்துடன் சருமத்தைப் பாதுகாத்தால் போதுமானதுதான்.
எனினும் சருமத்தை சுத்தம் செய்ய மாய்சரைசர், கிளென்சர், சன் ஸ்க்ரீன் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக வெய்யிலில் செல்வோர் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்-ஸ்க்ரீன் அவசியம். அவசியமான உங்கள் தோற்றம் கெடாதவாறு சில தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். உங்களை, உங்கள் சருமத்தை மேலும் அழகாகக் காட்டுவதற்கு, சிறிது அழகூட்டுவதில் தவறில்லை.

No comments:
Post a Comment