மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 550 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 550 அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எந்த மாநிலத்தில் உள்ள பணியிடத்திற்கு விண்ணபிக்கிறோமோ அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 06.07.2026 தேதியிட்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,300 வழங்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2026 முதல் 06.07.2026 வரை NIACL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு முடியும் நாள்
06.07.2026
எப்படி விண்ணப்பிப்பது?
தேர்வு செய்யப்படுவோர் 1 ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்வு நுழைவுச்சீட்டு தேர்வுக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். NIACL இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.newindia.co.in/ பக்கத்தில் உள்ள 'Careers' பிரிவின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
General/ EWS/ OBC (Male) – Rs.944/-
General/ EWS/ OBC (Female) – Rs.708/-
SC /ST/ PwBD (Any Gender) – Rs.236/-
தேர்வு செய்யும் முறை:
Online Written Examination
Regional Language Proficiency Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.07.2026
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 12.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
படி 1: NATS Portal-ல் பதிவு செய்யுங்கள்
NATS Portal-க்கு செல்லுங்கள்: NATS Portal
உங்கள் Login ID மூலம் உள்நுழையுங்கள்.
உங்கள் Profile-ஐ 100% Complete செய்யுங்கள்.
Search பகுதியில் “The New India Assurance Company Limited” என்பதைத் தேடுங்கள்.
அதற்கு எதிரில் உள்ள “APPLY” பட்டனை கிளிக் செய்து Apprenticeship-க்கு விண்ணப்பியுங்கள்.
படி 2: BFSI SSC Portal-ல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்
NATS-ல் வெற்றிகரமாக Apply செய்த பிறகு BFSI SSC Application Portal செல்லுங்கள்.
உங்கள் தனிப்பட்ட விவரங்களை (Personal Information) நிரப்புங்கள்.
NATS Enrollment Number-ஐ பதிவிடுங்கள்.
வயது மற்றும் கல்விச் சான்றிதழ்களை (Age & Educational Documents) பதிவேற்றம் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பும் State-ஐ தேர்வு செய்யுங்கள்.
PwBD விண்ணப்பதாரர்கள் Scribe விவரங்களை வழங்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டால் பணியமர்த்தப்பட வேண்டிய Regional Office Preference-ஐ தேர்வு செய்யுங்கள்.
உங்கள் பிரிவிற்கு (Category) ஏற்ப தேர்வு கட்டணத்தை (Exam Fee) செலுத்துங்கள்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://drive.google.com/file/d/1ieG8sdrU5wY3YvHparDJa9Cf1ZuiDMGB/view
ஆன்லைனில் விண்ணப்பிக்க – NATS Portal
https://nats.education.gov.in/student_type.php
ஆன்லைனில் விண்ணப்பிக்க – BFSI SSC Portal
https://beep.bfsissc.com/candidate_login
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://www.newindia.co.in/

No comments:
Post a Comment