சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி..? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 9, 2026

சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி..?

 சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி..?


தேவையான பொருட்கள்:-


நெத்திலி மீன் - ½ கிலோ


 (தலை, வால் பகுதி நீக்கி நன்கு கழுவிவைத்தது)


நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


கடுகு - ¼ டீஸ்பூன்


சீரகம் - ½ டீஸ்பூன்


வெந்தயம் - ½ டீஸ்பூன்


மிளகு - ½ டீஸ்பூன்


மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்


மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்


மல்லிப்பொடி - 3 டீஸ்பூன்


பச்சை மிளகாய் - 2


பூண்டு - 3 பல்


சின்ன வெங்காயம் - 15


தக்காளி - 1


தேங்காய் - பாதி (துருவியது)


மாங்காய் - 100 கிராம்


புளி - நெல்லிக்காய் அளவு


உப்பு - தேவையான அளவு


கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை


முதலில் நெத்திலி மீன் குழம்பு செய்ய தேவையான மசாலாவை தயார் செய்ய வேண்டும்.


 அதற்கு, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து 'ஆன்' செய்யவும். 


அதில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.


 எண்ணெய் சூடாகியதும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து பொரியவிடவும். 


அடுத்து தோல் நீக்கிய பூண்டு, தோல் உரித்த சின்ன வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 


ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப்பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும்.


அடுத்து வெட்டிவைத்த தக்காளியை சேர்த்து கிளறிவிட்டு, கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 


5 நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். அடுத்து அடுப்பை 'ஆப்' செய்துவிட்டு, சற்று சூடாறியவுடன் மிக்சியில் போட்டு, அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்.


 மீன் குழம்புக்கு தேவையான மசாலா ரெடி.


அடுத்து நெத்திலி மீன் குழம்பை வைக்க தொடங்கலாம். 


ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும். அத்துடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.


 அத்துடன் கீரிவைத்த பச்சை மிளகாய், வெட்டிவைத்த மாங்காய் துண்டுகள், புளி கரைசல் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிவிடவும்.


 அடுத்து, தேவைக்கு ஏற்ப உப்பையும் சேர்த்து, குழம்பை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


 அதன்பிறகு, சுத்தப்படுத்தி வைத்த நெத்திலி மீனையும் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.


 நிறைவாக, கறிவேப்பிலையை தூவி இறக்கினால் சுவையான, மணமான நெத்திலி மீன் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment