சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை தரும் நடைபயிற்சி..!
நடைப்பயிற்சி என்பது எந்த உபகரணமும் தேவையில்லாத, மிகச்சிறந்த மற்றும் எளிமையான உடற்பயிற்சி ஆகும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை சீராக வைத்திருக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய தசைகளை வலுவாக்குகிறது. கால்கள், முதுகுப் பகுதிகளை வலுவாக்கி ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புத் தேய்மானம்) அபாயத்தைக் குறைக்கிறது. மன அமைதியைத் தந்து, எண்டார்ஃபின்ஸ் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் புத்துணர்ச்சியைத் தருகிறது.
சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இக்கூழாங்கல் நடைபயிற்சி. நம் உடலில் நரம்புகள் முடிவடைவது உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும்தான். அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது.
செருப்பு இல்லாமல் நடக்கும்போது, கால்களில் உள்ள புள்ளிகள் துாண்டப்பட்டு, உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. கூழாங்கற்கள் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால், உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல், அனைத்துப் பகுதிகளிலும் தொட்டு உருண்டு ஓடும். இதனால் கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் சமமாகக் கிடைக்கிறது. வழுவழுப்பாக இருப்பதால் பாதத்தைப் பாதிக்காது. கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் துாண்டப்படுகின்றன.
இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும். கூழாங்கல் மூலம் பெறப்படும் அழுத்தத்தைப் போன்றதுதான், கைகளால் உள்ளங்காலுக்கு அழுத்தம் தரப்படும், புட் ரெப்லக்சாலஜி. (Foot Reflexology) கூழாங்கல் பாதையில் நடக்கும்போது, செருப்பு இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும்.
முதன்முதலில் நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும். முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும். பல்வேறு நோய்கள் குணமடைய இந்நடைபயிற்சி முறை உதவுகிறது.

No comments:
Post a Comment