ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7150 Apprentice காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 20, 2026

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7150 Apprentice காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7150 Apprentice காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (State Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 7150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 396 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Apprentice 


காலியிடங்களின் எண்ணிக்கை: 7150


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


காலியிடங்களின் எண்ணிக்கை: 7150


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.04.2026 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


ஊக்கத்தொகை: ரூ. 15,000


தேர்வு செய்யப்படும் முறை: 


Written Exam


Local Language Proficiency Test (LLPT)


இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு அல்லது வங்கி சார்ந்த கேள்விகள், கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026


விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.300. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


விண்ணப்பிப்பது எப்படி?


SBI Careers Portal-க்கு https://sbi.bank.in/web/careers/current-openings செல்லுங்கள்.


“Apprentice Recruitment 2026-27 (CRPD/ APPR/ 2026-27/ 07)” என்ற அறிவிப்பை திறக்கவும்.


முதலில் New Registration செய்து பெயர், மொபைல் எண், Email ID உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.


Login செய்து விண்ணப்பப் படிவத்தில் கல்வி தகுதி, முகவரி, தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை நிரப்பவும்.


தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Degree Certificate போன்றவை) upload செய்யவும்.


கட்டணம் இருந்தால் செலுத்தவும்.


அனைத்து தகவல்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.


இறுதியாக Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://sbi.bank.in/documents/77530/57941334/19052026_ENGAGEMENT+OF+APPRENTICE+2026+ADVERTISEMENT+CRPD_APPR_2026-27_07.pdf/fa9015ff-2268-a829-f9e8-8c1b5d55e126?t=1779173730791


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/sbiaapr26/


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://sbi.bank.in/web/careers/current-openings

No comments:

Post a Comment