ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தும் உணவுகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, May 7, 2026

ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தும் உணவுகள்..!

 ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தும்  உணவுகள்..!


சர்க்கரை சேர்க்கப்படும் இனிப்பு வகை உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை சேர்க்கப்பட்ட பதார்த்தங்களை பலரும் தவிர்க்கிறார்கள். குறிப்பாக நிரிழிவு நோயாளிகள் சர்க்கரையை பயன்படுத்துவதில்லை. அதேசமயம், சில உணவுகளில் சர்க்கரை இல்லை என்று கருதி அதனை அதிகம் உட்கொள்கிறார்கள். ஆனால் அவற்றின் உட்பொருட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். சர்க்கரையை விட ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தும் அத்தகைய உணவுகளை பார்ப்போம்.


தினமும் சாதம் சாப்பிடுவது கூட ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதில்லை. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்தையும், அதிக கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டிருக்கும். அதனால் உடலில் விரைவாக செரிக்கப்பட்டு, ரத்த சர்க்கரை அளவில் திடீர் ஏற்றத்தை உண்டாக்கி விடும். தொடர்ந்து அதிக அளவில் சாதம் உட்கொண்டால், டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். அதனால் நீரிழிவு நோயாளிகள் சாதத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சாதத்துடன் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். புரதம் அல்லது ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.


ரொட்டி வகையை சேர்ந்த நாண், பூரி போன்றவை கிளைசெமிக் குறியீட்டை அதிகம் கொண்டவை. அதனால் அவற்றை அடிக்கடி உட்கொள்ளக்கூடாது.


பிரெஞ்ச் பிரைஸ், உருளைக்கிழங்கு மசாலா, ஆலு மசாலா சாப்பிடுவதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.


பழச்சாறுகள் குறிப்பாக பாட்டில்களில் அடைக்கப்பட்டவை ரத்த சர்க்கரையை உயர்த்தக்கூடும். பழங்களில் காணப்படும் தேவையான நார்ச்சத்து அவற்றில் இல்லாததால், ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க செய்துவிடும். எனவே பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழ ஜூஸ்களை தவிர்ப்பதே நல்லது.


பழங்களில் மாம்பழம், திராட்சை, தர்பூசணி, அன்னாசிப்பழம், சப்போட்டா, உலர் திராட்சை, பேரீச்சம்பழம் ஆகியவற்றில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. எனவே, இவற்றை அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது, ரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும்.


சமோசா, பக்கோடா போன்ற, தேநீருடன் அடிக்கடி உண்ணப்படும் மொறுமொறுப்பான மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன.


சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், நாட்டுச்சக்கரையை சிலர் பயன் படுத்துகிறார்கள். ஆனால் அவையும் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டவை, இயற்கையாகவே இனிப்பானது. தாதுக்கள் நிறைந்தது என்றாலும் நீரிழிவு நோயாளிகள் அதை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment