எஸ்பிஐ வங்கியில் 9 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் மே 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்:
CRPD/SCO/2026-27/04
பணி: Lead Business Analyst
காலியிடங்கள்: 8
தகுதி: கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டேட்டா சயின்ஸ், ஏஐ மற்றும் எம்சி, அனலிடிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.3.2026 தேதியின்படி 30 லிருந்து 40 க்குள் இருக்க வேண்டும்.
பணி: Group Chief Economic Advisor
காலியிடம்: 1
தகுதி:
பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
31.3.2026 தேதியின்படி 55 முதல் 62-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://sbi.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
4.5.2026
முழு விவரம் காண
https://sbi.bank.in/documents/77530/57941334/13042026_Final_+ADV_CRPD_SCO_2026_27_04.pdf/54edf6e9-0b18-5b13-f950-ebf84f273dce?t=1776065118784

No comments:
Post a Comment