சமூக நலத்துறையில் 4 பணியிடங்களுக்கு ரூ 22,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, May 24, 2026

சமூக நலத்துறையில் 4 பணியிடங்களுக்கு ரூ 22,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!

 சமூக நலத்துறையில் 4 பணியிடங்களுக்கு ரூ 22,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!


தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஈரோடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


 இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.05.2026 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மூத்த ஆலோசகர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: 

M.A/ M.Sc SOCIOLOGY, PSYCHOLOGY/ CLINICAL PSYCHOLOGY, Post Graduate in Social Work (MSW – PG) படித்திருக்க வேண்டும். 


மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 22,000


தகவல் தொழில்நுட்ப பணியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி:


 Graduate with Diploma in computer/ IT படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 20,000


வழக்குப் பணியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: BSW, B.A.SOCIOLOGY, M.A/ M.Sc SOCIOLOGY, PSYCHOLOGY/ CLINICAL PSYCHOLOGY, Post Graduate in Social Work (MSW – PG) படித்திருக்க வேண்டும். 


சம்பளம்: ரூ. 18,800


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க


 https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2026/05/17793384832464.pdf


 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: 


மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு - 638011


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 27.05.2026


அறிவிப்பினைக் காண


https://pdfjobsjankari.com/wp-content/uploads/2026/05/DSWO-Erode-Notification-for-4-Case-Worker-Counsellor-Vacancies.pdf

No comments:

Post a Comment