அணுமின் கழக மருத்துவமனையில் ரூ 56,100 ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, April 13, 2026

அணுமின் கழக மருத்துவமனையில் ரூ 56,100 ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 அணுமின் கழக மருத்துவமனையில்  ரூ 56,100   ஊதியத்தில் வேலை வாய்ப்பு


இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் ஹைதராபாத்தில் (தெலங்கானா), பழையகாயல் (தூத்துக்குடி, தமிழ்நாடு) - சிர்கோனியம் வளாகம் மற்றும் ராவத்பாட்டா (கோட்டா, ராஜஸ்தான்) ஆகிய அணு எரிபொருள் வளாக மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் (குரூப் "ஏ, பி, சி") பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: NFC/01/2026


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Scientific Officer (C) (General Duty Medical Officer)


காலியிடங்கள்: 3


சம்பளம்: மாதம் ரூ.56,100


தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், கல்வி நிறுவனங்களில் மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 1 ஆண்டு கட்டாயப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும். இதனை பணி அனுபவமாகக் கருதப்படாது.


வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Nurse(A)


காலியிடங்கள்: 11


சம்பளம்: மாதம் ரூ.44,900


வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: +2 தேர்ச்சியுடன் டிஎன்எம் அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்திருப்பதுடன் இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.


பணி: Scientific Assistant - B (Radiographer)


காலியிடம்: 1


சம்பளம்: மாதம் ரூ.35,400


வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: குறைந்தது Radiography 60% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி முடித்திருப்பதுடன் 1 ஆண்டு ரேடியோகிராபி படிப்பை முடித்திருக்க வேண்டும்.


பணி: Technician(X-ray Technician)


காலியிடம்: 1


சம்பளம்: மாதம் ரூ.21,700


வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஒரு வருட எக்ஸ்ரே டெக்னீசியன், மெடிக்கல் ரேடியோ கிராபர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


பணி: Scientific Assistant - B (Pathology Technician)


காலியிடம்: 1


சம்பளம்: மாதம் ரூ.35,400


வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி படிப்புடன் எம்எல்டி முடித்திருக்க வேண் டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி படிப்புடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.


பணி: Pharmacist - B


காலியிடம்: 1


சம்பளம்: மாதம் ரூ.29,200


வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: 


+ 2 தேர்ச்சியுடன் டி.பார்ம் முடித்து 3 மாத பார்மசி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


படிப்புகள், தொழில்நுட்ப படிப்புகள் அனைத்தும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றதாக இருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.


தேர்வு செய்யப்படும் முறை:


 எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் General Awareness, Quantitative Aptitude மற்றும் தொழிற் பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்:


 Pharmacist, X-Ray Technician பணிக்கு ரூ. 100. Scientific Assistant, Nurse பணிக்கு ரூ.150. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: 


www.nfc.gov.in 


என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 18.4.2026


கூடுதல் விவரங்களுக்கு


https://www.nfc.gov.in/pdf/recruitment-advt/2026/adv-no-nfc_01_2026_eng.pdf

No comments:

Post a Comment