இசிஐஎல் நிறுவனத்தில் 32 பணியிடங்களுக்கு 40,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 15, 2026

இசிஐஎல் நிறுவனத்தில் 32 பணியிடங்களுக்கு 40,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 இசிஐஎல் நிறுவனத்தில்  32 பணியிடங்களுக்கு 40,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு முன்னணி மினிரத்னா பொதுத்துறை நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(இசிஐஎல்).


 இந்த நிறுவனம் புத்தாக்கம் மற்றும் உள்நாட்டு உற்பத்திமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து, உத்திசார் மின்னணுவியல் துறையில் ஈடுபட்டு வருவதுடன், அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, வலையமைப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு, சிபிஆர்என் மற்றும் மின்-ஆளுமை போன்ற உத்திசார் துறைகளிலும் செயல்பட்டு வருவதுடன், டிஜிட்டல் கணினி, விமானி அறை குரல் பதிப்பான்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நிரல்படுத்தக்கூடிய தர்க்கக் கட்டுப்பாட்டாளர்கள், புவி நிலையம் மற்றும் ஆழ்விண்வெளி வலையமைப்பு ஆண்டெனாக்கள் உள்ளிட்ட பல தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியில் முன்னோடியாகயும், தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதுடன், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது.


தற்போது, நாடு முழுவதும் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பல்வேறு வணிகப் பிரிவுகளில் முற்றிலும் ஒப்பந்தகால அடிப்படையில் பணியாற்றுவதற்காக, புராஜெக்ட் பொறியாளர், டெக்னிக்கல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கு திறமையான மற்றும் பணி அனுபவம் உள்ள பொறியியல் பட்டதாரிகள், ஐடிஐ முடித்தவர்கள் 18 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலில் ஓராண்டு காலத்திற்கு தேர்வு செய்யப்படுவர். பின்னர் திட்டத் தேவைகள் மற்றும் விண்ணப்பதாரரின் திருப்திகரமான செயல்திறன்களைப் பொறுத்து 4 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்யப்படலாம்.


இது குறித்து விபரம் வருமாறு:


அறிவிப்பு விளம்பர எண்: 07/2026

பணி: Project Engineer


தகுதி : பொறியியல் துறையில் சிஎஸ்இ, ஐடி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று ஆண்டுகள் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : முதலாம் ஆண்டும் மாதம் ரூ. 40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.55,000


வயது வரம்பு :


 33-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Technical Officer


தகுதி : பொறியியல் துறையில் சிஎஸ்இ, ஐடி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் 25,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. .28,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.31,000


வயது : 30-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Assistant Project Engineer


தகுதி : பொறியியல் துறையில் 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.25,506


வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Senior Artisan


தகுதி: ஐடிஐ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.23,368.


வயது : 30-க்குள் இருக்க வேண்டும்.


வயதுவரம்பு சலுகை:


 உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: 


www.ecil.co.in 


என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து, அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:


நாள்: 18.4.2026


இடம்: ECIL Zonal Office, Economist House, Post Box No. 3148, S-15, Industrial Estate, Guindy, Chennai - 600 032.


கூடுதல் விவரங்களுக்கு 


https://www.ecil.co.in/jobs/Advt_07_2026.pdf

No comments:

Post a Comment