இளநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, March 8, 2026

இளநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

 இளநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!


இளநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மார்ச் 8 உடன் நிறைவடையயிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


அதன்படி, 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.


தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் இந்தத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப். 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடையயிருந்தது.


இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 11 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


விருப்பமுள்ள மாணவா்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment