பொடுகுத்தொல்லையை வீட்டிலேயே கட்டுப்படுத்த எளிய முறைகள்..!
பொடுகுத்தொல்லை பல காரணங்களால் வரும். உலர் தலைமுடி, அதிக எண்ணெய் சுரப்பு, பூஞ்சைத்தொற்று, தவறான ஷாம்பு பயன்பாடு, மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்கள்.
இதை கட்டுப்படுத்த வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில ஹேர் பேக்கள் உதவும்.
வேப்பிலை ஹேர் பேக்
வேப்பிலை இயற்கையான பூஞ்சை எதிர்ப்புத்தன்மை கொண்டது. ஒரு கைப்பிடி வேப்பிலையை நன்றாக அரைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து தலையில் தடவவும். 20-30 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவால் கழுவவும். இது பொடுகை குறைக்க உதவும். மேலும் உடல் உஷ்ணத்தையும் குறைக்கும்.
தயிர் – எலுமிச்சை ஹேர் பேக்
ஒரு கப் தயிரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதை தலைமுடி மற்றும் தலையில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து கழுவவும். தயிர் தலைமுடியை மென்மையாக்கும்; எலுமிச்சை பொடுகை குறைக்க உதவும்.
வெந்தயம் ஹேர் பேக்
ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைத்து, காலையில் அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது தலையை குளிர்விக்கவும், பொடுகை குறைக்கவும் உதவும்.
அலோவேரா ஹேர் பேக்
கற்றாழையில் இருக்கும் ஜெல்லை நேரடியாக தலையில் தடவி 20-30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது அரிப்பு மற்றும் பொடுகை குறைத்து தலையை சுத்தமாக்கும். இந்த ஹேர் பேக்குகளை வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தலாம். அதோடு, மிதமான ஷாம்பு, குறிப்பிட்ட இடைவேளையில் தலையை அலசுதல், அதிக எண்ணெய் சேராத உணவு, போதிய தண்ணீர் குடித்தல் போன்றவை பொடுகை கட்டுப்படுத்த உதவும். பொடுகு அல்லது அரிப்பு மிகவும் அதிகமாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

No comments:
Post a Comment