டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, March 8, 2026

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:3-வது முறையாக இந்திய அணி சாம்பியன்

 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:3-வது முறையாக இந்திய அணி சாம்பியன்


96ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சரவெடியாக வெடித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சம்சன் ( 89 ரன்கள்), அபிஷேக் சர்மா (52 ரன்கள்), இஷான் கிஷான் (54) என அதிரடி காட்டினர். சிக்சர் மழையாக இந்திய அணி பொழிந்தது.


இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


தொடர்ந்து 257 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பின் ஆலன் , டிம் சீபராட் மார்க் சேப்மேன் களமிறங்கினர்.பின் ஆலன் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரச்சின் ரவீந்திரா 1 ரன்கள் , பிலிப்ஸ் 5 ரன்கள் , மார்க் சேப்மேன் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் டிம் சீபராட் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதமடித்து ஆட்டமிழந்தார்.


இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 96ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

No comments:

Post a Comment