ரயில்களில் தூங்குவதற்கு கட்டுப்பாடுகள்..விதிமுறைகள் என்னென்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, March 29, 2026

ரயில்களில் தூங்குவதற்கு கட்டுப்பாடுகள்..விதிமுறைகள் என்னென்ன?

 ரயில்களில் தூங்குவதற்கு கட்டுப்பாடுகள்..விதிமுறைகள் என்னென்ன?


இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.


தினமும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிது. தொலைதூரம் செல்பவர்கள் பெரும்பாலும் ரயில்களில் பயணித்து வருகின்றனர். குறைந்த கட்டணம், கழிவறை வசதி, படுக்கை வசதி போன்றவை இருப்பதால் பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர்.


ரயில்களில் மிடில் பெர்த் பிரச்னை


பயணிகளுக்காக பல்வேறு வசதிகளையும் செய்து வருகிறது. ரயில்களில் லோயர் பெர்த், மிடில் பெர்த், கீழ் பெர்த் என மூன்று வகையான படுக்கைகள் பயணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதில் லோயர் பெர்த் மூத்த குடிமக்கள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும், மேல் படுக்கை இளைஞர்கள் சிறுவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி வருகிறது.


இதில் மிடில் பெர்த் தான் பெரும் பிரச்சனையாகவே பயணத்தில் இருந்து வருகிறது. அதாவது மிடில் பெர்த் படுக்கையை தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது. மிடில் பெர்த் படுக்கையை பயணிகள் பயணித்தால் கீழ் பெர்த்தில் இருப்பவர்களால் அமர்ந்து கொண்டு பயணிக்க முடியாது.


இதனால் சில நேரங்களில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. கடைசியில் ரயில் டிக்கெட் பரிசோதகர் வந்து தான் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் அளவில் மீடில் பெர்த் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் பயணிகள் முதல் பார்த்து பயன்படுத்துவது தொடர்பாக ரயில்வே வாரியம் விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே இந்த விதிமுறைகள் அமலில் இருந்தாலும் இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு நினைவுபடுத்தும் வகையில் விதிமுறைகளை மீண்டும் அறிவித்துள்ளது .


மிடில் பெர்த் விதிமுறைகள் என்னென்ன?


மிடில் பெர்த்தில் பயணிப்பவர்கள் இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அவற்றை உறங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என ரயில்வே வாரியம் நினைவூட்டல் விடுத்துள்ளது. அதன் பிறகு பிற பயணிகள் இடையூறு ஏற்படாத வகையில் இருக்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கீழ் பெர்த்தில் உள்ள பயணிகள் வசதியாக அமருவதற்கு பகல் நேரங்களில் மிடில் பெர்த் மடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


இந்த விதிமுறையில் சிலருக்கு மட்டும் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் மிடில் பெர்த்தை படுக்கையாக பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இவர்களை தவிர வேறு பயணிகள் நடுப் படுக்கையை பயன்படுத்த விரும்பினால் டிக்கெட் பரிசோதவரிடம் அனுமதி கோரலாம்.


மேலும் கீழ்பெடுக்கையில் உள்ள பயணிகள் சம்மதம் தெரிவித்தால் நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்பிற்கு பிறகும் மிடில் பெர்த்தை நீங்கள் பயன்படுத்தலாம். மேல்படுக்கையில் தங்கும் பயணிகளுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஓய்வெடுக்கலாம் என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. நடுப்படுக்கை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் தீர்வு காண்பதற்காக டிக்கெட் பரிசோதனை அணுகுமாறு பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment