ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு 35,400 முதல் ரூ.1,12,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பதவிகளில் உள்ள 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
மத்திய கல்வித்துறையின் கீழ் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் கீழ் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பதவிகளில் ஆட்கள் நிரப்பப்படவுள்ளனர். இப்பணியிடங்களுக்கு மார்ச் 13 வரை விண்ணப்பம் பெறப்படுகிறது.
அமைப்பின் பெயர்
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTRC)
பதவியின் பெயர்
தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர்
காலிப்பணியிடங்கள் 12
இணையதளம்
https://www.nitttrc.ac.in/nitttr/
பணியின் விவரங்கள்
தொழில்நுப்ட உதவியாளர் கிரேடு-I 1
பல்நோக்கு உதவியாளர் (MTS)- 11
மொத்தம்- 12
இப்பணியிடங்கள்
பொதுப்பிரிவு - 5
எஸ்சி - 3
ஒபிசி - 3
EWS - 1
என நிரப்பப்படுகிறது.
பணியின் விவரங்கள்
தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு-I பதவி குரூப்-பி பிரிவில் நிரப்பப்படுகிறது.
சிவில் பிரிவி ஜூனியர் பொறியாளர் பதவி ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். மேலும், குறைந்தபட்சம் சிவில் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை (அல்லது) சிவில் பொறியியலில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் அனுபவம் தேவை. சிவில் பொறியியல் துறையில் நேரடி செய்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு அதிபடியாக 35 வயதைக் கடந்திருக்கக்கூடாது. 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை.
ஊதிய விவரம்
தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு நிலை 6 கீழ் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
திறன் தேர்வு உண்டு
இப்பணியிடங்களுக்கு திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பல்நோக்கு உதவியாளர் பதவிக்கான திறன் தேர்வு வாகனம் ஓட்டுதல், எலெக்ட்ரிஷியன், பிளம்பர், ஏ/சி மெக்கானிக், தோட்டக்கலை, தூய்மைப்பணி, கார்ப்பெண்டரி ஆகியவற்றில் நடைபெறும். இப்பதவிக்கு 3 திறன் தகுதிகளை தேர்வர்கள் தேர்வு செய்யலாம்.
ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் 5 மதிபெப்ண்கள் பெற வேண்டும். இதில் தகுதிப் பெறும் நபர்கள் அடுத்தக்கட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
எழுத்துத் தேர்விற்கான தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். கணினி வழியில் அல்லது ஒஎம்ஆர் தாள் வழியாக தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு https://www.nitttrc.ac.in/nitttr/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணபிக்க வேண்டும். இதற்கு ரூ.300 கட்டணம் செலுத்தி நிறைவு செய்ய வேண்டும். ஆன்லைனில் வழியாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
முகவரி
இயக்குநர்,
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR),
தரமணி,
சென்னை 600 113,
தமிழ்நாடு,
இந்தியா.
முக்கிய நாட்கள்
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மார்ச் 13-ம் தேதி மாலை 5.30 மணி வரை பெறப்படுகிறது. நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மார்ச் 23 மாலை 5.30 மணிக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பம் ஏற்கப்படாது.

No comments:
Post a Comment