எய்ம்ஸ் நிறுவனத்தில் 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்குமாதம் ரூ.9,300 - 34,800 ஊதிய விகிதத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, March 1, 2026

எய்ம்ஸ் நிறுவனத்தில் 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்குமாதம் ரூ.9,300 - 34,800 ஊதிய விகிதத்தில் வேலை வாய்ப்பு..!

 எய்ம்ஸ் நிறுவனத்தில் 2,551 செவிலியர் அலுவலர்  பணியிடங்களுக்குமாதம் ரூ.9,300 - 34,800 ஊதிய விகிதத்தில் வேலை வாய்ப்பு..!


அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Nursing Officer


மொத்த காலியிடங்கள்: 2,551


காலியிடங்கள் விவரம்: பதிண்டா - 72, போபால் - 76, புவனேஸ்வர் - 55, தியோகர் - 104, கோரக்பூர் - 203, குவஹாத்தி - 78, கல்யாணி - 205, மங்களகிரி - 88, நாக்பூர் - 56, ரேபரேலி - 85, புது தில்லி - 282, பாட்னா - 168, ரிஷிகேஷ் - 64, ராய்ப்பூர் - 43, விஜய்பூர், ஜம்மு - 54, மதுரை - 30, மைதாங்கரி - 32, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் நிறுவனம் - 5, அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனம் -1, சிஐபி ராஞ்சி - 13, புதுச்சேரி - 88, ஏனாம் - 7, காரைக்கால் - 383, எஸ்.ஜே.எச் மருத்துவமனை - 140, புது தில்லி இஎஸ்ஐசி - 219.


தகுதி: இந்திய நர்சிங் கவுன்சில், மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங்(டிஜிஎன்எம்) முடித்து இந்திய நர்சிங் கவுன்சில், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.


பணி அனுபவம்: குறைந்தபட்சம் ஐம்பது படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 16.3.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி,எஸ்டி மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.


சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800


தேர்வு செய்யப்படும் முறை: என்ஓஆர்சிஇடியின் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.2,400, இதர அனைத்து பிரிவினர் ரூ.3000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.3.2026


மேலும்  முழு விவரங்களுக்கு


https://drive.google.com/file/d/1Lx63ElUBHootZm_HtV-Hrxro_Z5gH1tD/view

No comments:

Post a Comment