இந்திய தபால் துறையில் ரூ.24,470 முதல் ரூ 29,380 வரை ஊதியத்தில் 28740 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, January 31, 2026

இந்திய தபால் துறையில் ரூ.24,470 முதல் ரூ 29,380 வரை ஊதியத்தில் 28740 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

 இந்திய தபால் துறையில் ரூ.24,470 முதல் ரூ 29,380 வரை ஊதியத்தில் 28740 பணியிடங்களுக்கு  வேலை வாய்ப்பு


இந்தியா போஸ்ட் ஆபீஸ் 2026-ம் ஆண்டுக்கான கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் தோராயமாக 28,740 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2000 அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


10-ம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால் போதும், தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது. தேசிய அளவில் அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் உள்ள 28 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,000 அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு ஜனவரி 31 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்.


உங்கள் பகுதிகளிலேயே தபால் நிலையத்தில் பணி வாய்ப்பைப் பெறலாம். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் என்ன, தேர்வு செய்யப்படும் முறை என்ன உள்ளிட்ட விவரங்களை வேலை நாடுபவர்கள் அறிந்துகொள்ளலாம்.


பதவியின் பெயர்:


கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்


காலிப்பணியிடங்கள் :28,740


இணையதளம்:


https://indiapostgdsonline.gov.in


விண்ணப்பப் பதிவு தொடக்கம்:


ஜனவரி 31, 2026


காலிப்பணியிடங்களின் தோராய எண்ணிக்கை


ஆந்திர பிரதேசம்- 1,060


பிகார் -1,347


டெல்லி -42


ஹிரியானா -270


ஜம்மு மற்றும் காஷ்மீர் -267


கர்நாடகா- 1,023


மத்திய பிரதேசம்- 2,120


வட கிழக்கு பகுதி- 1,014


பஞ்சாப் -262


தமிழ்நாடு -2,009


உத்தர பிரதேசம்- 3,169


மேற்கு வங்காளம்- 2,982


அஸ்ஸாம்- 639


சத்தீஸ்கர் -1,155


குஜராத் -1,830


இமாசல பிரதேசம் -520


ஜார்கண்ட் -908


கேரளா -1,691


மகாராஷ்டிரா -3,553


ஒடிசா- 1,191


ராஜஸ்தான் -634


தெலுங்கானா - 609


உத்தரகாண்டு- 445


மொத்தம் -28,740


தகுதிகள் என்னென்ன?


இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தபால் அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்று தகுதிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்திற்கான மொழியை 10-ம் வகுப்பு வரை பயின்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணினி இயக்க திறன், சைக்கிள் ஓட்ட தெரிந்திருப்பது ஆகியவை அவசியமாகும்.


விண்ணப்பித்தால் போதும்


போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். அப்படி தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நேரடியாக நடத்தப்படும். ஆகவே, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் போதுமானது. மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானால், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகவல் அளிக்கப்படும்.


விண்ணப்பிக்க வழிமுறைகள் இதோ


இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள்


 https://indiapost.gov.in/


 அல்லது


 https://indiapostgdsonline.gov.in/ 


என்ற இணையதங்களின் வழியாக விண்ணப்பிக்கலாம். 


ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை சமர்பித்து நிறைவு செய்ய வேண்டும். அப்படியே விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி சமர்பிக்கலாம்.


சம்பளம் எவ்வளவு?


கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படும்.


உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.10,00 முதல் ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும்.


முக்கிய நாட்கள்


விண்ணப்பப் பதிவு தொடக்கம்


31.01.2026


விண்ணப்பிக்க கடைசி நாள்


14.02.2026


ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்


02.02.2026


விண்ணப்பம் நிறைவு


16.02.2026


விண்ணப்பம் திருத்தம்


18.02.2026 - 19.02.2026


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment