சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்...!
சர்க்கரைகள் மற்றும் இனிப்புகள்:
சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகைகள், சாக்லேட் ,தேன்
கேக்குகள், பேக்கரி பொருட்கள், ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்ற சர்க்கரை நிறைந்த இனிப்புகளைத் தவிர்க்கவும்.
பாக்கெட்டுகளில் சேமித்துவைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அவை அதிகளவு கார்போஹைட்ரேட் உடையதாகவும் குறைந்த அளவு நார்ச்சத்து உள்ளதாகவும் இருக்கிறது. இவை உடலுக்கு கேடு விளைவிக்கும்.
மைதா மற்றும் சோள மாவு - இவை இரண்டிலும் நார்ச்சத்து இல்லை. மேலும் இவை தயாரிக்கப்படும் போது அதில் உள்ள சத்துகள் எல்லாம் அகற்றப்பட்டுவிடுகின்றது. இதனால் பெரும்பான்மையான சத்துகள் இழப்பிற்கு பிறகுதான் நமக்கு கிடைக்கிறது. ஆகவே இவற்றையும் தவிர்க்கவும்.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சிவப்பு இறைச்சி என வகைப்படுத்தப்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் உள்ளடக்கிய இவ்வகையான உணவு பொருள்களாக இருப்பதால் இதய தமனிகளில் அடைப்புகளை உருவாக்கி இதய நோய் உருவாக காரணமாக அமைகிறது.
ஹாம் என்பது ஒருவகையான பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகை. இவை அதிக கொழுப்பைபினையும் அதிக சோடித்தையும் கொண்ட இறைச்சி. இதனால் இதய பாதிப்புகள் ஏற்படலாம். ஏற்கெனவே இதய நோய்களில் உலகத்தின் தலைநகராக இந்தியா இருப்பதால் இத்தகைய உணவு வகைகளை தவிர்த்து குறைந்த உப்பு மற்றும் சரியான அளவு கொழுப்பு உள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
. மாம்பழம் மற்றும் பலா போன்ற பழங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதை அப்படியேவோ, ஜூஸாகவோ, மில்க் ஷேக்காகவோ எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
* தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, உருளைக்கிழங்கை! கேரட்டும் பீட்ரூட்டும் வேண்டவே வேண்டாம்.
சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ, (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ணலாம்.
ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.
சப்போட்டா
இந்தப் பழத்தின் ஜி.ஐ. குறியீட்டு எண் 55க்கு மேலே உள்ளதால், இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிகம்.
திராட்சை
நார்ச்சத்து, வைட்டமின் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 100 கிராம் திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
வாழைப்பழம்
அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. 46 முதல் 70 வரை. பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
தர்பூசணி
குறைந்த நார்ச்சத்து, குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் ஜி.ஐ குறியீடு 72. வைட்டமின் ஏ, சியும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
அன்னாசி
அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராமுக்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
சீத்தாப்பழம்
வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகம். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.
முந்திரிப்பழம்
நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். 103 ஜி.ஐ. மதிப்பு கொண்ட இப்பழத்தின் கால் பங்கிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை அரிசியை உட்கொள்வதை குறைக்குமாறு சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அரிசி உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர், இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் நீரழிவு நோயாளிகள் அரிசியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று இல்லை. அதற்குப் பதிலாக, குறைந்த அளவில் அவ்வப்போது மாற்று அரிசி வகைகளைத் தேர்வு செய்யலாம். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பல்வேறு வகையான அரிசிகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த வகை அரசி ஏற்றது, எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரவுன் அரிசி: சர்க்கரை நோயாளிகள் பிரவுன் ரைஸ் சாப்பிடலாம். பிரவுன் அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. பிரவுன் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, பழுப்பு அரிசி மெதுவாக ஜீரணமாகும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாக உயர்த்தாது.
சாம அரிசி: சாமா அரிசியில் 50க்கும் குறைவான கிளைசெமிக் குறியீடு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது சாப்பிடலாம். சாமா சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீக்கிரம் உயராது.
பாசுமதி அரிசி: பாஸ்மதி அரிசியை அவ்வப்போது சிறிய அளவில் சாப்பிடலாம். அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டே இதற்குக் காரணம். பாசுமதி அரிசியின் GA சுமார் 50-52 ஆகும். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.
சிவப்பு அரிசி: சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை சாப்பிடலாம். சிவப்பு அரிசியின் GA சுமார் 55 ஆகும், எனவே இதை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன.
No comments:
Post a Comment