இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.15,300 முதல் ரூ 48,700 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, May 19, 2025

இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.15,300 முதல் ரூ 48,700 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!

 இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.15,300 முதல் ரூ 48,700 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில உள்ள பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 இந்து மதத்தை சார்ந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேளக்குழு, பரிச்சாரகர், அலுவலக உதவியாளர், அத்யாபாகம், பகல் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் தேவை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில உள்ள பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேளக்குழு, பரிச்சாரகர், அலுவலக உதவியாளர், அத்யாபாகம், பகல் காவலர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர்


மேளக்குழு -1


பரிச்சாரகர்- 1


அலுவலக உதவியாளர் -1


அத்யாபாகம் -1


பகல் காவலர் -1


இரவு காவலர் -2


திருவலகு -3


இதில் உபகோயிலான சேத்துப்பட்டில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயில், எழுப்பூர் அர்த்தநாரீஸ்வரர் திருகோயில் மற்றும் கீழ்பாக்கம் முத்துமாரிகங்கையம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களில் தலா 1 திருவலகு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் 10.05.2205 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபடியாக 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி


மேளக்குழு பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


 இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் (அ) சார்ந்த இசை பள்ளி பயிற்சி சான்றிதழ் (அ) தமிழ்நாடு இசைப் பள்ளி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


பரிச்சாரகர் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும்தெரிந்திருக்க வேண்டும்.


 திருக்கோயிலில் நைவேத்தியம் மற்றும் பிரசாதங்கள் நன்கு தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் தயார் செய்தல், விநியோகம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.


 மேலும், திருக்கோயில் பழக்க வழக்கங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.


 வைகானசம் ஆகமப்படி பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.


அலுவலக உதவியாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அத்யாபாகம் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஆகம பள்ளி (அ) அரசு சார்ந்த வேதபாட சாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


பகல் காவலர், இரவு காவலர், திருவலகு ஆகிய பதவிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பள விவரம்


மேளக்குழு பதவிக்கு ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை சம்பளம் வழங்கப்படும்.


பரிச்சாரகர் பதவிக்கு மாதம் ரூ.13,200 முதல் அதிகபடியாக ரூ.41,800 வரை சம்பளம் வழங்கப்படும்.


அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.


அத்யாபாகம் பதவிக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.


பகல் காவலர் பதவிக்கு மாதம் ரூ.11,600 வரை ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.


இரவு காவலர் பதவிக்கு ரூ.10,700 முதல் ரூ.33,700 வரை சம்பளம் வழங்கப்படும்.


திருவலகு பதவிக்கு ரூ.6,900 முதல் ரூ.21,500 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்களின் அனுபவம், செய்ல்முறை தேர்வு, கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


 அறிவிப்பை பார்க்க


https://drive.google.com/file/d/1alJ59uStQevzgmWDc6ORUeOkdCTAAr0Y/view?usp=drivesdk


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி


செயல் அலுவலர்,


அருள்மிகு சீனிவாசாப் பெருமாள் திருக்கோயில், 


எண் : 6, எல்.என்.பி கோயில் தெரு,


 எழும்பூர், 


சென்னை - 8.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2025 


மாலை 5.45 மணி வரை


சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment