எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,218 பணியிடங்களுக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 2, 2026

எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,218 பணியிடங்களுக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வேலை வாய்ப்பு..!

 எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,218 பணியிடங்களுக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வேலை வாய்ப்பு..!



எய்ம்ஸ் மருத்துவமனையில் (AIIMS Job) 2,218 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்சிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதிய கமிஷன் லெவல் 7 படி மாதம் ரூ.9,300 - 34,800 வரை சம்பளம் வழங்கப்படும்.


மத்திய அரசின் உயரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக எய்மஸ் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த மருத்துவமனையில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிடங்கள் விவரம்:

நர்சிங் ஆபிசர் - 2,218 காலியிடங்கள்


மருத்துவமனை வாரியாக


அவந்திபோரா - 75

படிண்டா - 47

போபால் - 12

பிலாஸ்பூர் - 89

புவனேஸ்வர் - 197

தியோகர் - 223

கோரக்பூர் - 61

குவஹாத்தி - 188

கல்யாணி - 53

மங்களகிரி - 32

நாக்பூர் - 48

ரேபரேலி - 81

டெல்லி - 121

பாட்னா - 201

ரிஷிகேஷ் - 38

ராய்ப்பூர் - 60

விஜய்பூர், ஜம்மு - 29

ரேவாரி - 10

ஜிப்மர், புதுச்சேரி - 39

என்.ஐ.டி.அர்.டி - 07

சிஐபி, ராஞ்சி - 04

எஸ்ஜேஹெச் மருத்துவமனை - 05

டாக்டர் ஆர்எம்எல் மருத்துவமனை - 31

ஆர்ஹெச்பிடி நஜஃப்கர் - 36

கேஎஸ்சிஹெச் மருத்துவமனை - 02


கல்வித் தகுதி:


டிஜிஎன்எம் / பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து இருப்பது அவசியம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவும்.


வயது வரம்பு:


18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை உண்டு.


சம்பளம் 


தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதிய கமிஷன் லெவல் 7 படி மாதம் ரூ.9,300 - 34,800 வரை வழங்கப்படும்.


தேர்வு முறையை பொறுத்தவரை NORCET முதல் நிலை தேர்வு மற்றும் மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி, EWS/ PWD பிரிவினர் ரூ.2,400 செலுத்த வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள் ரூ.3,000 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:


  13.08.2026 


முதல் நிலை தேர்வு 12.09.2026 அன்று நடைபெறும்.


 மெயின் தேர்வு:


 30.09.2026 அன்று நடைபெறலாம்.


அதிகாரப்பூர்வை தேர்வு அறிவிப்பினை படிக்க:


 https://aiimsexams.ac.in/advertisement/6a6350f7e5a81c4267f4ff04

No comments:

Post a Comment