ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் Non teaching பிரிவில் 267 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பிரிவு அல்லாத Non டீச்சிங் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதவி நூலகர், உதவிப் பதிவாளர், காப்பகப் பொறுப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 267 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளது. டெல்லியில் உள்ள இந்த பல்கலைக்கழகம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பிரிவு அல்லாத Non டீச்சிங் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
எக்ஸிகியூட்டிவ் என்ஜினியர் (மின்சாரம், சிவில்), உதவி நூலகர், உதவிப் பதிவாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, ஆராய்ச்சி அதிகாரி, அமைப்பு ஆய்வாளர், காப்பகப் பொறுப்பாளர் தனிச் செயலாளர், சீனியர் அசிஸ்டண்ட், இளநிலைப் பொறியாளர் (சிவில்) உதவி ஆவணக் காப்பாளர், சுருக்கெழுத்தர், ஆய்வக உதவியாளர், லிஃப்ட் இயக்குபவர், இளநிலை உதவியாளர், மெஸ் ஹெல்ப்பர், உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 267 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். எஸ்.எஸ்.எல்.சி, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கான பணிகள் உள்ளன. பிரைவேட் செகரட்டரி பணிக்கு டிகிரி + ஸ்டெனோகிராபி, டைப்பிங் ஆகிய திறனுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம். கல்வித்தகுதி பற்றிய முழு விவரங்க்ளை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
27.07.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். பணியிடத்திற்கு தகுந்தபடி வயது வரம்பு மாறுபடும். அதிகபட்சமாக எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, திறன் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ள தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் பணிக்கு தகுந்தபடி மாறுபடும். குரூப் ஏ பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1,500 கட்டணமாக செலுத்த வேண்டும். குரூப் பி மற்றும் சி பிரிவு பணிக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் 27.07.2026 கடைசி தேதி ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க
https://www.jnu.ac.in/sites/default/files/inline-files/AdvtNo_01_RC_NT_2026.pdf
Online இல் விண்ணப்பிக்க
https://jnunt.samarth.edu.in/index.php/site/login
முழு விவரங்களுக்கு
https://www.jnu.ac.in/career

No comments:
Post a Comment