தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள 56 பதவிகளில் 839 காலிப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு:டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை)-ல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள 56 பதவிகளில் 839 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வு நடத்தி, பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை)-ல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள 56 பதவிகளில் 839 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பணி ஆய்வாளர், சாலை ஆய்வாளர், அளவர், உதவி வரைவாளர், உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பயிற்சி அலுவலர், சுரங்க முதலாள், மீன்வள சார் ஆய்வாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 56 பதவிகளில் 839 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
வயது விவரம்
தேர்வர்கள், அனைத்து பதவிகளுக்கும் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பதவி மற்றும் இயக்கூர்தி ஆய்வாளர், நிலை-II நீங்கலாக) 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும்
தேர்வர்கள் இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு 01.08.2026 அன்றும் மற்றும் இயக்கூர்தி ஆய்வாளர், நிலை-II பதவிக்கு 01.07.2026 அன்றும் 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். இனவாரியான உச்ச வயது வரம்பு மற்றும் வயது வரம்பை அறிந்து கொள்ள அறிவிப்பினை படிக்க வேண்டும். அதிகபட்சமாக இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு வயது வரம்பு 37 ஆக உள்ளது.
கல்வித்தகுதி
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கல்வித்தகுதி பொறுத்தவரை, அந்தந்த பணிக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக, ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பிடெக் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி விவரத்தை அறிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தாள் ஒன்று, இரண்டு என எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக நடைபெறும். இதன் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணிக்கு tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப ஒருங்கிணைந்த பணிகள் தேர்வுக்கு ஜூலை 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்ப்டடுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை;
ஒருமுறைப் பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம்
தேர்வர்கள் https://apply.tnpscexams.in எனும் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யலாம்.
மேலும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பின்னர், விண்ணப்பத் திருத்தச் சாளரம் 19.08.2026 முதல் 21.08.2026 வரை மூன்று நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். இக்காலத்தில் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்ய இயலும். விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம் முடிந்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க
https://tnpsc.gov.in/document/tamil/CTS%20-%20Diploma-(Tamil).pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

No comments:
Post a Comment