தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா: ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 24, 2026

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா: ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா: ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும், வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.


பனிமய மாதா பேராலயத் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பனிமய மாதா பேரலாயத் திருவிழா நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதனால், தூத்துக்குடியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை இயங்காது. ஆனால், அரசு கரூவூலம் மற்றும் அவசர காலப் பணிகளுக்கான அரசுத் துறைகள் ஆகியவை வழக்கம்போல் செயல்படும்.


இதனால், தூத்துக்குடியில் வரும் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை இயங்காது. ஆனால், அரசு கரூவூலம் மற்றும் அவசர காலப் பணிகளுக்கான அரசுத் துறைகள் ஆகியவை வழக்கம்போல் செயல்படும்.


ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால், அதனை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment