வல்வில் ஓரிவிழா கொண்டாட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை:
கொல்லிமலை பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும், ஆடி, 17, 18 ஆகிய நாட்களில், அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டில் வரும், ஆக., 2, 3ல், அரசு சார்பில், வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. விழாவிற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலை பகுதிக்கு வருகை தர உள்ளனர்.
இதனால், ஆக., 3ல், ஆடி, 18ல், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், ஆக., 8- ல், பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளான, ஆக., 3ல், மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
மேலும், இந்த விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment