சுவையான, பூப் போன்ற மென்மையான இட்லி கிடைக்க டிப்ஸ் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, May 9, 2026

சுவையான, பூப் போன்ற மென்மையான இட்லி கிடைக்க டிப்ஸ்

 சுவையான, பூப் போன்ற மென்மையான இட்லி கிடைக்க டிப்ஸ்


சுவையான, பூப் போன்ற மென்மையான இட்லி, சில இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை.


ஆனால், இதற்கான ரகசியங்கள் எளியவைதான். அவற்றைப் பின்பற்றினால், நல்ல ஓட்டல் ஸ்டைல் இட்லி, வீட்டிலேயே கிடைக்கும்.


அதற்கான குறிப்புகள்...


* நல்ல தரமான உளுந்தம்பருப்பும் இட்லி அரிசியும் பயன்படுத்த வேண்டும்.


* அரிசி : உளுந்து 4:1 என்ற விகிதம் சரியானது.


* உளுந்தை தனியாகவும், அரிசியை தனியாகவும் ஊற வைக்கவும்.


* அரைக்கும்போது குளிர்ந்த நீர் பயன்படுத்தினால் மாவு சூடாகாது.


* உளுந்தை மிகவும் நன்றாக, வழுவழுப்பாக அரைக்க வேண்டும்.


* அரிசியை சற்று கரகரப்பாக அரைத்தால் இட்லி மென்மையாகும்.


* அரைக்கும்போது ஒரு கைப்பிடி அவல் சேர்த்தால் இட்லி மிருதுவாகும்.


* உளுந்து ஊற வைக்கும்போது ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து ஊற வைத்தால் நல்ல நுரை வரும்.


* மாவை அதிகமாக கெட்டியாகவோ, அதிகம் தண்ணீராகவோ விட வேண்டாம்.


* மாவைக் கலக்கும்போது கையைப் பயன்படுத்தினால் நல்ல புளிப்பு வரும்.


* மாவை வெப்பமான இடத்தில் 8 முதல் 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.


* புளித்த மாவை அதிகமாக கிளற வேண்டாம்.


* இட்லித் தட்டில் சிறிது எண்ணெய் தடவி ஊற்றவும்.


* மாவை தட்டில் ஊற்றியவுடன் உடனே வேகவைக்கவும்.


* இட்லி வேகும்போது தீ மிதமானதாக இருக்க வேண்டும்.


* 10-12 நிமிடம் ஆவியில் வேகவைத்தால் போதும்.


* வேகவைத்ததும் உடனே எடுக்காமல் 2 நிமிடம் காத்திருக்கவும்.


* உளுந்தை அரைக்கும் முன் 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்தால் நன்றாக நுரை வரும்.


* மிக்சியில் அரைக்கும்போது இடைவெளி கொடுத்து அரைக்கவும், சூடு ஏறாது.


* மாவு அரைத்த உடனே உப்பு சேர்க்காமல், புளித்த பிறகு சேர்ப்பது நல்லது.


* இட்லி மாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் மென்மை கூடும்.


* இட்லி மாவில், ஒரு கைப்பிடி அளவு சமைத்த சாதம் சேர்த்தால் இட்லி பஞ்சு போல் வரும்.


* இட்லி கொப்பரையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பிறகே தட்டுகளை உள்ளே வைக்க வேண்டும்.


* அதிக நேரம் வேகவைத்தால் இட்லி கடினமாகிவிடும். நேரம் முக்கியம்.


* இட்லி மாவை பிரிட்ஜில் வைக்கும் முன் நன்றாக புளிக்க வைத்திருக்க வேண்டும்.


* பிரிட்ஜில் வைத்த மாவை பயன்படுத்தும் முன் அறை வெப்பநிலைக்கு கொண்டு வரவும்.


* உளுந்து பழையதாக இருந்தால், ஒரு சிட்டிகை மட்டும் ஆப்ப சோடா சேர்க்கலாம்.


* இட்லி மாவை தினமும் மெதுவாக கலக்கினால் அதன் தரம் நீடிக்கும்.


* காஸ்ட் அயன் எனப்படும் இரும்பு பாத்திரத்தில் இட்லியை வேகவைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.


* புதிய மாவை பழைய மாவுடன் கலந்தால் நன்கு புளிக்கும், சுவையும் சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment