சன் ஸ்கிரீன் எல்லோருக்கும் அவசியம்தானா? பொருத்தமான சன் ஸ்கிரீனை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Monday, May 11, 2026

சன் ஸ்கிரீன் எல்லோருக்கும் அவசியம்தானா? பொருத்தமான சன் ஸ்கிரீனை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?

 சன் ஸ்கிரீன் எல்லோருக்கும் அவசியம்தானா? பொருத்தமான சன் ஸ்கிரீனை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?


சருமம் கறுத்துப் போகாமலிருக்கவே பலரும் சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி, சூரியனின் கதிர்களிலிருந்து பாதுகாப்பளிப்பதுதான் அதன் வேலை.


 தொடர்ச்சியாக சூரிய ஒளியின் தாக்கத்துக்கு உள்ளாகும்போது சருமம் வெகுவாக பாதிக்கப்படும். சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவும் கொலாஜென் சிதைவதில் தொடங்கி, பல மோசமான பாதிப்புகள் ஏற்படும். சீக்கிரமே முதுமைத்தோற்றம் வரும். 


எனவே, வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் உபயோகம் எல்லோருக்குமே மிக முக்கியம்.


கெமிக்கல் சன் ஸ்கிரீன், பிசிக்கல் சன் ஸ்கிரீன் என சன் ஸ்கிரீனில் இருவகை உண்டு. கெமிக்கல் சன் ஸ்கிரீன் என்பது பரவலாக நம்மில் பலரும் உபயோகிப்பது.


 சருமத்தில் தடவியதும் அது உள்ளே சென்றுவிடும். இந்த வகை சன் ஸ்கிரீன், சூரியனின் கதிர்களை உள்வாங்கி, பிறகு அவற்றின் பாதிப்பு சருமத்தை தாக்காத வகையில் பாதுகாப்பு கொடுக்கும். 


இது சருமத்தில் செயல்படத் தொடங்கவே 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதனால்தான் வெளியே கிளம்புவதற்கு 15- 20 நிமிடங்கள் முன்பே சன் ஸ்கிரீன் தடவிக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.


 பிசிக்கல் சன் ஸ்கிரீன் என்பது ஸிங்க் ஆக்ஸைடு உள்ளது. மேலே ஒரு லேயர் தடவியது போல திக்காக காட்சியளிக்கும். இந்த வகை சன் ஸ்கிரீன், சூரிய கதிர்களை சருமத்தின் உள்ளே ஊடுருவச் செய்யாமல் சருமத்தில் ஒரு தடுப்பு போல செயல்படும்.


யுவிஏ, யுவிபி என எல்லாவிதமான கதிர்களின் தாக்கத்திலிருந்தும் பாதுகாப்பு கொடுக்கும்படியான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். இதை ‘பிராட் ஸ்பெக்ட்ரம்’ என்று சொல்வோம். தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக் கூடாது.


 எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். சருமத்தில் தடவும்போது வெள்ளைப்படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது.


சன் புரொடக்‌ஷன் ஃபேக்டர் எனப்படும் எஸ்பிஎஃப் அளவு பார்த்தே சன் ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன் தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும்.

No comments:

Post a Comment