இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் PGCIL நிறுவனத்தில் 660 பணியிடங்களுக்கு ரூ 24,000 முதல் 1,08,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, April 18, 2026

இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் PGCIL நிறுவனத்தில் 660 பணியிடங்களுக்கு ரூ 24,000 முதல் 1,08,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் PGCIL நிறுவனத்தில் 660 பணியிடங்களுக்கு ரூ 24,000  முதல் 1,08,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு


இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL), நாட்டின் மிகப்பெரிய மின் பரிமாற்ற நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Junior Officer Trainee, Diploma Trainee மற்றும் Junior Technician Trainee ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 660 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 21,000 முதல் ரூ. 1,08,000 வரை சிறப்பான ஊதியம் வழங்கப்படும்.


மத்திய அரசுப் பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் 11.05.2026-க்குள் ஆன்லைன் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 


பதவியின் பெயர்

- மொத்த இடங்கள்


Diploma Trainee (Electrical/Civil) 465


Diploma Trainee (Civil – DTC) 104


Diploma Trainee (Survey – DTS) 3


Junior Officer Trainee (HR) 30


Junior Officer Trainee (F&A) 23


Junior Technician Trainee (Survey) 23


மொத்தம் 648+


கல்வித் தகுதி


Diploma Trainee

 (Electrical)


3 ஆண்டு கால Regular Diploma (Electrical / Electrical & Electronics / Power Systems / Power Engineering).


Diploma Trainee (Civil) 3 ஆண்டு கால Regular Diploma in Civil Engineering.


Diploma Trainee (Survey) 3 ஆண்டு கால Regular Diploma in Survey Engineering (அல்லது) Diploma in Civil (Survey ஒரு பாடமாக இருக்க வேண்டும்).


Junior Officer Trainee (HR) 3 ஆண்டு கால Regular Degree – BBA / BBM / BBS (அல்லது அதற்கு இணையான படிப்பு).


Junior Officer Trainee (F&A) Inter CA / Inter CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Junior Technician Trainee (Survey) 2 ஆண்டு கால Regular ITI (Surveyor) தேர்ச்சி


குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பு 


Diploma Trainee (DTE/DTC/DTS):


General/OBC(NCL)/EWS: 70% மதிப்பெண்கள் அவசியம்.


SC/ST/PwBD: தேர்ச்சி மதிப்பெண் (Pass Marks) போதுமானது.


Junior Officer Trainee (HR):


General/EWS/OBC(NCL): 60% மதிப்பெண்கள் அவசியம்.


Junior Technician Trainee (Survey):


அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Regular ITI தேர்ச்சி.


விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.


வயது வரம்பு தளர்வு 


அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வுகள்:


SC/ST வகுப்பினருக்கு – 5 ஆண்டுகள்


OBC வகுப்பினருக்கு – 3 ஆண்டுகள்


PwBD (Gen/EWS) வகுப்பினருக்கு – 10 ஆண்டுகள்


PwBD (SC/ST) வகுப்பினருக்கு – 15 ஆண்டுகள்


PwBD (OBC) வகுப்பினருக்கு – 13 ஆண்டுகள்


Ex-Servicemen வகுப்பினருக்கு – அரசு விதிமுறைகள் படி


சம்பள விவரங்கள்


Diploma Trainee ரூ. 24,000 – 1,08,000/-


Junior Officer Trainee ரூ. 24,000 – 1,08,000/-


Junior Technician Trainee ரூ. 21,000 – 72,000


தேர்வு செயல்முறை


அனைத்துப் பதவிகளுக்கும் முதற்கட்டமாக கணினி வழித் தேர்வு (CBT) நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வுகள் (Skill/Trade Test) நடத்தப்படும்.


1. Diploma Trainee (DTE / DTC / DTS)


நிலை 1: எழுத்துத் தேர்வு அல்லது கணினி வழித் தேர்வு (Written Test / CBT).


தேர்வு முறை: இதில் இரண்டு பகுதிகள் இருக்கும் (Technical & Aptitude).


இறுதித் தேர்வு: CBT தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.


2. Junior Officer Trainee (HR / F&A)


இந்த பதவிக்கு இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்:


நிலை 1: கணினி வழித் தேர்வு (CBT).


நிலை 2: கணினி திறன் தேர்வு 


குறிப்பு: Computer Skill Test என்பது ஒரு தகுதித் தேர்வு (Qualifying Nature) மட்டுமே. 


இறுதிப் பட்டியல் CBT மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்படும்.


3. Junior Technician Trainee (Survey)


இந்த பதவிக்கு இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்.


நிலை 1


கணினி வழித் தேர்வு (CBT).


நிலை 2


 தொழில்முறைத் திறன் தேர்வு (Trade Test).


குறிப்பு: Trade Test என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. இதில் தேர்ச்சி பெறுவது அவசியம், ஆனால் இதன் மதிப்பெண்கள் இறுதிப் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது.


விண்ணப்பக் கட்டணம்


ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள் கட்டணம் இல்லை


மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.200/-


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 20.04.2026


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி:


 11.05.2026


எப்படி விண்ணப்பிப்பது?

 https://www.powergrid.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  காண 


https://www.powergrid.in/sites/default/files/job_opportunities_document/Detailed%20Advertisement%20-%20Non%20Executive%20Posts%202026.pdf


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 


https://www.powergrid.in/en/job-opportunities

No comments:

Post a Comment