இந்திய விவசாய உர கூட்டுறவு துறையில் ரூ 65,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
இந்தியாவின் மிகப்பெரிய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO), 2026-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி பொறியாளர் பயிற்சி (Graduate Engineer Trainee – GET) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ₹65,000/- வரை மிகச்சிறந்த ஊதியம் வழங்கப்படுவதால், இது பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30.04.2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IFFCO விவசாய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Graduate Engineer Trainee (GET) – பல்வேறு காலியிடங்கள்
கல்வித் தகுதி
IFFCO விவசாய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2026 Graduate Engineer Trainee (GET) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் பட்டம் (B.E / B.Tech) பெற்றிருக்க வேண்டும்.
Chemical / Mechanical / Electrical / Instrumentation & Electronics
Civil / IT / Computer Science
Bachelor in Artificial Intelligence
குறிப்பு
படிப்பை முடித்தவர்கள் அல்லது ஆகஸ்ட் 2026-க்குள் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் என்று எதிர்பார்ப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
IFFCO இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 30.04.2026 அன்றைய தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன; அதன்படி, SC / ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
சம்பள விவரங்கள்
IFFCO இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் Rs.65,000/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
IFFCO விவசாய கூட்டுறவு துறை Agriculture Graduate Trainee பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி ஆன்லைன் தேர்வு
(Computer Based Online Test)
நேர்காணல் (Personal Interview)
விண்ணப்பிக்கத் தொடங்கிய தேதி:
24.04.2026
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:
30.04.2026
எப்படி விண்ணப்பிப்பது?
IFFCO விவசாய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.04.2026 முதல் 30.04.2026 தேதிக்குள்
https://www.iffco.in/
இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://iffco-public-assets.s3.ap-south-1.amazonaws.com/s3fs-public/2026-04/Advertisement-GET.pdf?VersionId=pImMDNZTkvh5tS2z60_q4RRbSClee4CW
ஆன்லைன் விண்ணப்ப படிவம் பெற
https://aavedan.iffco.coop/GETRecruitment/

No comments:
Post a Comment