3003 பணியிடங்களுக்கு ₹18,000 முதல் ₹1,51,100 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு:மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு
மத்திய அரசின் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.சியில் மொத்தம் 3003 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சுருக்கெழுத்தாளர், ஸ்டோர் கிளர்க், துணை செவிலியர், இளநிலை மருந்தாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் பணி மேற்கொண்டு வருகிறது. காலியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும். தேர்வுகள் நடத்தப்பட்டு இதற்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவது வழக்கம்.
பணியிடங்கள் விவரம்:
* சுருக்கெழுத்தாளர் தரம் - II
* ஸ்டோர் கிளர்க்,
* மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
* பெர்சனல் அசிஸ்டண்ட்
* பப்ளிக் ஹெல்த் நர்சிங் ஆஃபிசர்
* பொது சுகாதார செவிலியர் அதிகாரி
* மருத்துவ சமூக நல அதிகாரி
* துணை செவிலியர்
* இஜிசி தொழில்நுட்ப வல்லுநர் (இளநிலை)
* எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்
* சுகாதாரப் பணியாளர் (பெண்)
* இளநிலை மருந்தாளர்
* பணிமனை உதவியாளர்
என 87 வகையான பிரிவுகளில் மொத்தம் 3003 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி
இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி (துறைசார்ந்த பிரிவில்) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அதிகபட்சமாக 35 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை:
கணினி வழியிலான தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் டெஸ்ட், டேட்டா எண்ட்ரி தேர்வு ஆகியவை நடைபெறும்.
கணினி வழி தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இவை பொது அறிவுத்திறன் (25 கேள்விகள்), பொது விழிப்புணர்வு (25 கேள்விகள்), அளவுசார் திறன் (25 கேள்விகள்) மற்றும் ஆங்கில மொழி (25 கேள்விகள்) ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.50 மதிப்பெண்கள் நெகட்டிவ் மதிப்பெண்ணாகக் கழிக்கப்படும்.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுவை ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ரூ.100 விண்ணப்ப கட்டணம் ஆகும். பெண்கள் எஸ்டி/எஸ்சி, உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 13.04.2026
* விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள்: 04.05.2026
* தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: 05.05.2026
* விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான நாள்: 11.05.2026 to 13.05.2026
* கணினி வழி தேர்வு நடைபெறும் மாதம்: June, 2026 (Tentative)
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
விண்ணப்ப கட்டணம்:
Women / SC / ST / PwBD / Ex-Servicemen – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://ssc.gov.in/home/apply

No comments:
Post a Comment