அசத்தலான அப்பளக் குழம்பு செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:-
அப்பளம் - 5 (பொறித்தது)
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 12 பல்
தக்காளி - 2 (சிறியது)
நல்லெண்ணெய் - 2½ ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1½ டீஸ்பூன்
மல்லிப் பொடி - 3 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - ¼ முறி
வெல்லம் - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: -
அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற பாத்திரத்தை வைக்கவும். அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். நன்கு சூடாகியதும் கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்க்கவும். நன்கு பொரிந்து வந்ததும், வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
தொடர்ந்து, கறிவேப்பிலை, பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய்யிலேயே அனைத்தும் வெந்து வரவும். கருகிவிடக்கூடாது. அடுத்து வெட்டி வைத்த தக்காளியை சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கி வரவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரவேண்டும். அப்போது, புளி கரைசல் தண்ணீரை சேர்க்கவும். தொடர்ந்து, அரைத்து எடுக்கப்பட்ட தேங்காய் பாலையும் சேர்க்கவும்.
நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வரும்போது, வெல்லத்தை சேர்க்கவும். இது இனிப்புக்காக அல்ல. சுவையை நன்கு கூட்டித்தரும். குழம்பு தண்ணீயாகவும் இருக்கக்கூடாது, கெட்டியாகவும் இருக்கக்கூடாது. கிரேவிபோல் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் துண்டு துண்டுகளாக உடைத்து வைத்த அப்பளத்தை சேர்த்து கிளறவும். அப்பளத்தை போட்ட உடனேயே அடுப்பை 'ஆப்' செய்துவிடவும். நிறைவாக, கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால், சுவையான அப்பளக் குழம்பு ரெடி.

No comments:
Post a Comment