சாப்பாட்டிற்கு சுவையான 'சைடிஸ்'.. பழைய சாத மற்றும் அரிசி கூழ் வடகங்கள் செய்வது எப்படி..?
பழைய சாத வடகம்
தேவையான பொருட்கள்
பழைய சாதம் - 4 கைப்பிடி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பழைய சாதத்தை மிக்சி ஜாரில் போட்டு அத்துடன் சீரகம், மிளகாய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக அரைக்கவும்.
அதன்பிறகு, கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சிறு சிறு உருண்டைகளாக வைக்கவும். அல்லது முறுக்கு பிழிவதுபோல் அச்சில் வைத்து பிழியவும் செய்யலாம்.
வெயிலில் 2 நாட்கள் காயவைத்து எடுத்து, எண்ணெய்யில் பொரித்தால் சுவையான பழைய சாத வடகம் தயார்.
அரிசி கூழ் வடகம்
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 4 கப்
தண்ணீர் - 8 பங்கு
பச்சை மிளகாய் - 4
பெருங்காயம் - ½ ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கையளவு
சீரகம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசியை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர், அதை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். மாவு கொதிக்கும்போது சீரகம், வெட்டி வைத்த பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்.
கொதித்து மாவு மேலே வரும்போது அடுப்பை 'ஆப்' செய்துவிடவும்.
¼ மணி நேரம் கழித்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து, அதை வெயிலில் விரிக்கவும். துணி மீது காய்ச்சிய மாவை சிறிய சிறிய வட்டமாக ஊற்றவும். நன்கு வெயில் அடித்தால் மறுநாள் துணியின் பின்புறம் தண்ணீர் தெளித்து கூழ் வடகத்தை எடுத்து, வேறு தட்டில் வைத்து 4 நாட்கள் காய வைத்து எடுக்கவும்.
பிறகு எண்ணெய்யில் பொரித்தால், சுவையான அரிசி கூழ் வடகம் ரெடி.

No comments:
Post a Comment