தமிழகத்தில் இன்று (டிசம்பர் 4)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 3, 2023

தமிழகத்தில் இன்று (டிசம்பர் 4)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்கள்

 தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்கள்



விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பழனி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் விழுப்புரம் மாவட்டமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக, ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,04) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மிக்ஜாம் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.


கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று டிசம்பர் 4-ம் தேதி (திங்கட்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.


இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 3-வது சனிக்கிழமையான 16-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment