நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 21, 2023

நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கன்னியாகுமரியில் நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். 


திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள். இதனைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் குமரி தந்தை என அழைக்கின்றனர். 


எனவே, இந்த தினத்தை நினைவுப்படுத்தும் வகையில், நவம்பர் 1-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment