தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் 2118 பணியிடங்களுக்கு ₹29,380 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 5, 2026

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் 2118 பணியிடங்களுக்கு ₹29,380 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் 2118 பணியிடங்களுக்கு ₹29,380 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!



இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,118 காலிப்பணியிடங்கள் உள்ளன.


இப்பணியில் மிக முக்கிய சிறப்பு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்று எதுவுமில்லாமல், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு பணி வழங்கப்படும்.


அஞ்சல் துறையில் கிராமின் தக் சேவக் (GDS) எனப்படுவது கீழ் கிளை போஸ்ட் மாஸ்ட் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பதவிகள் நேரடியாக விண்ணப்பம் பெறப்பட்டு நிரப்பப்படுகிறது.


இப்பதவிக்கு தேர்வாகும் நபர்கள் தபால் நிலையங்களில் உள்ள தினசரி வேலைகளை மேற்கொள்வார்கள். தபால் தலை மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது, கடிதங்களை சரியாக முகவரிக்கு கொண்டு போய் சேர்ப்பது, தபால் வங்கி சேவைகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.


தகுதிகள் என்னென்ன?


இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 21-ம் தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். இதில் மத்திய அரசு விதிமுறைகளின் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு வழங்கப்படும்.


கல்வித்தகுதியாக மாநில அல்லது மத்திய பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களை கொண்டு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயம் ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும்.


இவைமட்டுமின்றி, கணினி இயக்கும், மிதிவண்டி ஓட்டுவது ஆகிய திறன்களை பெற்றிருக்க வேண்டும்.


எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் கணினி தொழில்நுட்ப முறையில் ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு தபால் வட்டத்தில் செயல்படும் தபால் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, அப்பகுதியில் இருந்து விண்ணப்பவர்களின் இருந்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வார்கள். இப்பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் எந்த தபால் நிலையத்திற்கு விண்ணப்பிக்கீறார்களோ, அந்த நிலையத்திற்குள் அடங்கிய பகுதியில் இருப்பது அவசியமாகும்.


தேர்வானவர்களின் தரவரிசை பட்டியல் வெளியானதும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்படும். அப்போது, அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அடையாள அட்டை, வகுப்பு சான்றிதழ், மாற்றுத்திறனாளி விண்ணப்பதார் என்றால் அதற்கான சான்றிதழ், திருநர் என்றால் அதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவர் வழங்கிய மருத்துவ சான்றிதழை சமர்பிப்பது கட்டாயமாகும்.


சம்பளம் எவ்வளவு?


கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு காலம் சார்ந்த தொடர்ச்சிப் படி (TRCA), அடிப்படையில் ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரை வழங்கப்படும்.


உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரை ஊதியம் வழங்கப்படும்.


இவை மத்திய அரசின் நிரந்தரப் பணியிடங்கள் கிடையாது. நேர அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.


மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு வருடத்திற்கு 3 சதவீத சம்பள உயர்வு, கொடுப்பனை, பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகிய சலுகைகள் உண்டு.


விண்ணப்பிப்பது எப்படி?


தபால் நிலையங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள்


 https://www.indiapost.gov.in/gdsonlineengagement 


என்ற பிரத்யேக இணையதளம் வழியாக வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் நிலையில், 21-ம் தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் பின்னர், செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளின் விண்ணப்பம் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். அதனையடுத்து, விரைவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியல் வெளியாகும்.


முக்கிய நாட்கள்


விண்ணப்ப பதிவு


 31.08.2026 முதல் 19.09.2026


ஆன்லைன் விண்ணப்பம்


 02.09.2026 முதல் 21.09.2026


விண்ணப்பம் திருத்தம்


 23.09.2026 முதல் 24.09.2026


விண்ணப்பிக்கும் முறை 


Step 1 – Registration


India Post GDS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.


Mobile Number மற்றும் Email ID மூலம் OTP Verification செய்து Registration செய்யவும்.


10ம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும்.


தேவையான Photo மற்றும் Signature-ஐ Upload செய்யவும்.


Step 2 – Apply Online


Apply Online என்பதைத் தேர்வு செய்யவும்.


Postal Circle, Division மற்றும் Post Preference-ஐத் தேர்வு செய்யவும்.



விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால் ₹100 செலுத்தவும்.


Application Form-ஐ Submit செய்து, எதிர்கால பயன்பாட்டிற்காக Download / Print செய்து வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://www.indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf


Circle Wise Vacancy details பார்க்க 


https://indiapost.gov.in/gdsonlineengagement/pdf/Annexure-Ia.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://indiapost.gov.in/gdsonlineengagement

No comments:

Post a Comment