நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 11,403 கிளர்க் பணிக்கான அறிவிப்பு வெளியீடு
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 403 கிளர்க் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எஸ்.பி.ஐ. தவிர்த்து நாட்டில் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு நாடு முழுவதும் காலியாக உள்ள 11 ஆயிரத்து 403 கிளர்க் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.பி.பி.எஸ். மூலம் 11,403 கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 675 காலிப்பணியிடங்கள். பட்டதாரிகள் ரூ.43,000 வரை ஊதியம் பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21.
இதில், தமிழ்நாட்டில் மட்டும் 675 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தேர்வு அமைப்பு அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு ஆகஸ்ட் 1 முதல் வரும் 21 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில் ஆங்கிலப்பாடத்தை தவிர மற்ற பாடத்திற்கான கேள்விகள் தமிழிலும் இடம்பெற்று இருக்கும்.
முதல்நிலைத் தேர்வு, வரும் அக்டோபர் 10 மற்றும் 11 ஆம் தேதியும், அதில் தகுதி பெறுபவர்களுக்கு டிசம்பர் 27 ஆம் தேதி முதன்மைத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தமிழ்நாட்டில் ஆயிரத்து 217 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 675 ஆக குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஐ.பி.பி.எஸ். மூலம் தேர்வாகி வங்கியில் பணிபுரிபவர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே ரூ. 43,000 வரை ஊதியம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Institute of Banking Personnel Selection (IBPS) நிறுவனம் Customer Service Associates (Clerk) பணியிடங்களுக்கு 11,403 காலியிடங்கள் அறிவித்துள்ளது. Any Degree முடித்த 20 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 01.08.2026 முதல் தொடங்கி 21.08.2026 வரை நடைபெறும்.
பதவி: Customer Service Associates (Clerk)
சம்பளம்: Rs.24,050 – 64,480/-
மொத்த காலியிடங்கள்: 11,403
வங்கி வாரியான காலியிட விவரங்கள்:
பாங்க் ஆஃப் பரோடா :1,200
பாங்க் ஆஃப் இந்தியா: 500
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா :500
கனரா வங்கி :2,500
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா: 1,419
இந்தியன் வங்கி: 1,700
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 780
பஞ்சாப் நேஷனல் வங்கி :2,016
பஞ்சாப் & சிந்த் வங்கி :376
யூகோ வங்கி :412
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (NR)
மொத்தம் :11,403
மாநில வாரியாக காலியிட விவரங்கள்:
அந்தமான் & நிக்கோபார்: 18
ஆந்திரப் பிரதேசம்: 186
அருணாச்சலப் பிரதேசம் :45
அசாம் :349
பீகார் :491
சண்டிகர் :20
சத்தீஸ்கர் :265
தாத்ரா & நகர் ஹவேலி :18
டாமன் & டையூ: 7
டெல்லி :415
கோவா: 61
குஜராத் :698
ஹரியானா :196
இமாச்சலப் பிரதேசம்: 97
ஜம்மு & காஷ்மீர்: 67
ஜார்கண்ட் :182
கர்நாடகா: 1,414
கேரளா: 108
லடாக் :6
லட்சத்தீவு: 11
மத்தியப் பிரதேசம்: 570
மகாராஷ்டிரா :1,051
மணிப்பூர்: 42
மேகாலயா :22
மிசோரம்: 17
நாகாலாந்து :31
ஒடிசா :337
புதுச்சேரி :26
பஞ்சாப் :481
ராஜஸ்தான் :392
சிக்கிம் :28
தமிழ்நாடு :675
தெலங்கானா : 191
திரிபுரா :64
உத்தரப் பிரதேசம்: 1,731
உத்தரகாண்ட் :145
மேற்கு வங்காளம் 946
மொத்தம் 11,403
கல்வி தகுதி:
A Degree (Graduation) in any discipline
வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
Preliminary Examination (Objective Test)
Main Examination (Objective Test)
Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
01.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி:
21.08.2026
விண்ணப்பிக்கும் முறை:
IBPS அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
“CRP CSA-XVI (IBPS Clerk 2026)” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
“Click Here for New Registration” என்பதை தேர்வு செய்யவும்.
உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவும்.
கிடைக்கும் Registration Number & Password-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும்.
தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
விண்ணப்பிக்கும் State/UT-ஐ கவனமாக தேர்வு செய்யவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
விண்ணப்பத்தை ஒருமுறை சரிபார்த்து, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பத்தை Submit செய்து, அதன் நகலை PDF/Print ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://www.ibps.in/wp-content/uploads/Notification_CRP_CSA_XVI-Final.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://ibpsreg.ibps.in/csaxvijul26/

No comments:
Post a Comment