ரயில்வேயில் 6565 பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, July 1, 2026

ரயில்வேயில் 6565 பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு..!

 ரயில்வேயில் 6565 பணியிடங்களுக்கு  ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு..!


இந்தியன் ரயில்வேயில் (RRB) 6,565 டெக்னிஷியன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் பணிப்புரிய வேண்டும் என்ற கனவு லட்சக்கணக்கான தேர்வர்களிடம் உள்ளது. இத்துறையின் பதவிகளுக்கு கடுமையான போட்டியும் நில்வி வருகிறது. இந்த நிலையில், ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நாடு முழுவது காலியாக உள்ள 6,565 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்புவத்ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலிப்பணியிடங்களின் விவரம்


மொத்தம் உள்ள 6,565 காலிப்பணியிடங்கள் இரண்டு பிரிவுகளாக நிரப்பப்படுகின்றன. 


டெக்னீஷியன் கிரேடு - 1 (சிக்னல்) - 323 இடங்கள் 


டெக்னீஷியன் கிரேடு - III - 6,242 இடங்கள்


கல்வி தகுதி 


டெக்னிஷியன் கிரேட் 1 (சிக்னல்):


 இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/IT பிரிவில் பி.எஸ்சி (B.Sc) பட்டம் / 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ / பி.இ அல்லது பி.டெக் (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும். 


டெக்னிஷியன் கிரேடு III: 


பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சியுடன் ஐடிஐ (ITI) அல்லது அப்ரெண்டீஸ் பயிற்சி (Apprentice Training) முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் 


டெக்னிஷியன் கிரேட் 1 (சிக்னல்): லெவல் 7-ன் படி ரூ.29,200/-


டெக்னிஷியன் கிரேடு III: லெவல் 2-ன் படி ரூ.19,900/- முதல் வழங்கப்படுகிறது.


வயது வரம்பு 

கிரேடு-I (சிக்னல்) பணிக்கு: 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கிரேடு-III பணிக்கு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


வயதுத் தளர்வு: 


அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.


தேர்வு முறை 


கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பின்னர் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 


விண்ணப்பிப்பது எப்படி?

 

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இப்பதவிகளுக்கு ஜூன் 30 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்:


 பொது மற்றும் ஓபிசி பிரிவினர்: விண்ணப்பக் கட்டணம் ரூ.500. (தேர்வு எழுதிய பிறகு ரூ.400 விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் திருப்பித் தரப்படும்). 


எஸ்சி/எஸ்டி, பெண்கள், இபிசி, மாற்றுத்திறனாளிகள் & மூன்றாம் பாலினத்தவர்: விண்ணப்பக் கட்டணம் ரூ.250. (தேர்வு எழுதிய பிறகு இந்த முழுத் தொகையும் திருப்பித் தரப்படும்).


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://www.rrbthiruvananthapuram.gov.in/assets/pdf/Detailed_CEN_02_20262.pdf


Online யில் விண்ணப்பிக்க 


https://www.rrbapply.gov.in/#/auth/landing

No comments:

Post a Comment