கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 30, 2026

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை



சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் முதலாம் ஆண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், பள்ளி மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஏகப்பட்ட விடுமுறை நாட்கள் வருகிறது. அதாவது, பல்வேறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் என்பதால் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆடித் திருவிழா நடைபெற உள்ளது.

இந்தாண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை 21ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கி, ஜூலை 22ஆம் தேதி தேதி காலை கொடியேற்ற நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் வைபவம் ஆகஸ்ட் 5ஆம் தேதியும், ஆகஸ்ட் 6ஆம் ததி மாவிளக்கு வைத்தல், ஆகஸ்ட் 7ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, கோட்டை மாரியம்மன் கோயிலின் ஆடி திருவிழாவில் முக்கிய நிகழ்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், ஆகஸ்ட் 5ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும்.

No comments:

Post a Comment