ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 30, 2026

ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள்

 ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள்


சேலம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் மற்றும் ஆடி 18 – ஆடிப்பெருக்கு ஆகியவற்றை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் ஆடி 18 – ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி திங்கள் கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.


இதேபோல், ஈரோடு மாவட்டத்திற்கும் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 – ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சேலம் மாவட்டத்தில் 22 ஆம் தேதியும், தருமபுரி மாவட்டத்தில் 8 ஆம் தேதியும் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 22 ஆம் தேதியும் பணி நாளாக செயல்படும் எனவும் அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment