பற்களில் ஏற்படும் கரையினை எளிய முறையில் நீக்கும் முறைகள்..!
வாய் என்ற பிரதான அமைப்பிற்குள் பற்கள் மிகவும் முக்கியமானது. இதனை குழந்தை பருவத்தில் இருந்தே மிகவும் கவனமாக பாதுகாத்து பராமரித்து வரவேண்டும். குறிப்பாக உணவினை
நன்கு மென்று அதனை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது பற்கள்தான். அதில் ஏற்படும் கரையினை எவ்வாறு நீக்குவது என்று தெரிந்துகொள்ளலாம்.
* பல் துலக்கும் போது எலுமிச்சை சாறோடு சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
* நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினாலும் மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும்.
* காலையில் நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பது(ஆயில் ஃபுல்லிங்) சிறந்த பலன் தரும்.
* சாப்பிட்டு முடித்ததும் ‘மவுத் பிரஷ்’ பயன்படுத்தினாலும் கறை நீங்கும். நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தாலும் கறை நீங்கும்.
* ஆரஞ்சுப் பழத்தோல், எலுமிச்சை தோல், உப்பு சேர்த்து துலக்கலாம்.
* ஸ்ட்ராபெர்ரி, தக்காளிகளில் வைட்டமின் சி சத்துள்ளதால் இதனை பற்கள் மீது தேய்ப்பதால் பற்களின் கறை நீங்கி பளிச்சிடும்.
* கேரட், பாதாம் சாப்பிட்டால் பற்களின் கறைகள் பல்லிருக்கில் சேரும் உணவுத் துணுக்குகளையும் நீக்கும்.
* கொய்யா தினமும் சாப்பிடலாம். கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று துப்பினால் கறை நாளடைவில் நீங்கும்.
* கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் தினமும் 2 முறை கழுவி வந்தாலும் கறைகள் படியாது.
* ஒரு ஸ்பூன் கிராம்பு பொடியில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பற்களில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி, தினமும் 2 முறை செய்து வந்தால் கறைகள் நீங்கும். வாய் துர்நாற்றம் வீசுவதை தடுக்கலாம்.
* 2 துளிகள் ரோஸ்மேரி ஆயிலை 1 ஸ்பூன் நீரில் கலந்து வாயில் ஊற்றி 10 நிமிடம் கொப்பளித்து துப்பினால் பற் கறைகள், வாய் துர்நாற்றம் நீங்கும்.
No comments:
Post a Comment