இந்து சமய அறநிலையத் துறையில் 10 பணியிடங்களுக்கு ரூ 38,500 முதல் ரூ 58,600 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உபகோயில் மேளம் குழு
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஓதுவார்
காலியிடங்கள்: 1
சம்பளம்:
மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட 3 ஆண்டு ஓதுவார் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: உபகோயில் எழுத்தர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: கூர்க்கா
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: திருவலகு
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: ஏவலர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: சலவைத் தொழிலாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: சீட்டு விற்பனையாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு 1.7.2024 தேதியின்படி 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் இத்துறைக்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியாற்றவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்று, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து
உதவி ஆணையர்,
அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயில்,
தேக்கம்பட்டி,
மேட்டுப்பாளையம்,
கோவை-641 305
என்ற அஞ்சல் முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாகவே கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment