இந்து சமய அறநிலையத் துறையில் ரூ 36,800 முதல் ரூ 50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் உப அறநிறுவனமான சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ( TNHRCE Recruitment 2025 )வெளியாகியுள்ளது.
எழுத்தர், அலுவலக உதவியாலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
எழுத்தர் - 1
அலுவலக உதவியாளர் -1
மடப்பள்ளி -1
காவலர் -1
திருவலகு -1
மொத்தம் -5
வயது வரம்பு
திருக்கோயில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மடப்பள்ளி பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அற நிறுவனங்களில் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தேரிந்திருக்க வேண்டும்.
காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகு பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
எழுத்தர் பதவிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
மடப்பள்ளி பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
காவலர் மற்றும் திருவலகு பதவிகளுக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36.800 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிக்கான நிபந்தனைகள்
விண்ணப்பதார்களுக்கு தமிழில் நன்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்
https://hrce.tn.gov.in/
மற்றும்
https://vadapalaniandavar.hrce.tn.gov.in/
என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பிற ஆவணங்களின் நகல் மட்டுமே இணைத்து அனுப்பப்பட வேண்டும். நேர்காணலின்போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்கள் உடல்தகுதிச் சான்று பெற்ரு அதன் நகலையும் விண்ணப்ப்த்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்
கல்வித்தகுதி சான்றிதழ்
மாற்று சான்றிதழ்
சாதி சான்றிதழ்
குடும்ப அட்டையின் நகல்
ஆதார நகல்
சுயவிலாசமிடப்பட்ட ரூ.,25 க்கான தபால் தலை கூடிய உறை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை ஆணையர்/செயல்அலுவலர்,
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,
வடபழநி,
சென்னை-26.
விண்ணப்பிக்க கடைசி நாள்
19.07.2025
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment