10 ஆம் படித்தவர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை ஊதியத்தில் 1075 பணியிடங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு..!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் சி பதவியான பல்துறை ஊழியர்களுக்கான தேர்வு அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது.
மல்டி டாஸ்கிங் ஊழ்யர் மற்றும் ஹவால்தார் பதவிகள் இத்தேர்வின் மூலம் நிரப்பட உள்ளது.
10-ம் வகுப்பு படித்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
SSC MTS 2025 அறிவிப்பு
மத்திய அரசின் அமைச்சகம், துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (SSC) போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.
அந்த வகையில், 10-ம் வகுப்பு கல்வித்தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படும் SSC MTS 2025 தேர்வின் அறிவிப்பு ஜூன் 26 வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.
இதில் மல்டி டாஸ்கிங் ஊழியர் (MTS) மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) மற்றும் மத்திய போதைப்பொருள் பணியகம் (CBN) ஆகியவற்றில் இருக்கும் ஹவால்தார் (Havaldar) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
மல்டி டாஸ்கிங் ஊழியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹவால்தார் பதவிக்கு 1075 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முழுமையான காலிப்பணியிடங்கள் பின்னர் வெளியிடப்படும்.
வயது வரம்பு
01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
மல்டி டாஸ்கிங் ஊழியர் பதவிக்கு அதிகபடியாக 25 வயது வரை இருக்கலாம்.
விண்ணப்பதார்கள் 02.08.2000 முன்னரும், 01.08.2007 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
ஹவால்தார் பதவிக்கு அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.
விண்ணப்பதார்கள் 02.08.1998 தேதிக்கு முன்னரும், 01.08.2007 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.
மாற்றத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்ற பெண்கள், கணவரை பிரிந்த பெண்களுக்கு 35 முதல் 40 வயது வரை தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
01.08.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
மத்திய அரசின் 7வது ஊதிய குழுவின்படி, இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 1 கீழ் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் கணினி வழி தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மல்டி டாஸ்கிங் ஊழியர் பதவிக்கு தேர்வு மட்டும் நடத்தப்படும்.
ஹவால்தார் பதவிக்கு தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு நடத்தப்படும்.
தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வை எழுதலாம். கணினி வழி தேர்வு இரண்டு பகுதிகள் கொண்டு நடத்தப்படும்.
முதல் பிரிவில் நுண்ணறிவு கேள்விகளுடன் 120 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் பகுதி பொது அறிவு மற்றும் ஆங்கிலம் கொண்டு 150 மதிப்பெண்களுடம் நடைபெறும்.
நெகட்டிங் மார்க்கிங் கிடையாது.
தேர்வில் தேர்ச்சி அடையும் விண்ணப்பதார்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்
https://ssc.gov.in/
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
அறிவிப்பை பார்க்க
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_mts_2025.pdf
இத்தேர்விற்கான விண்ணப்பம் ஜூன் 26 முதல் தொடங்கிய நிலையில், ஜூலை 24 வரை பெறப்படும். இதற்கான தேர்வு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 24 தேதிக்குள் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
24.07.2025
விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம்
29.07.2025 முதல் 31.07.2025
கணினி வழி தேர்வு
20.09.2025 - 24.10.2025
SSC MTS 2025 தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏதேனும் சிரமம் இருந்தால் 1800 309 3063 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment